- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அப்போ தான் கெளதம் கம்பீரின் உண்மையான கேரக்டர் இந்திய ரசிகர்களுக்கு தெரியும்.. தமீம் இக்பால் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு உதவிய கம்பீர் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அதனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் விராட் கோலியுடன் எவ்வாறு நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. ஏனெனில் நாட்டுக்காக ஒன்றாக விளையாடினாலும் ஐபிஎல் தொடரில் அவர்கள் 2013, 2023 சீசன்களில் சண்டையிட்டுக் கொண்டனர். இருப்பினும் இந்தியாவுக்காக விராட் கோலியும் தாமும் ஒரு பக்கத்தில் இணைந்து வெற்றிக்காக செயல்படுவோம் என்று கௌதம் கம்பீர் கூறினார்.

- Advertisement -

வெற்றி நடையில் இந்தியா:

அதே போலவே இப்போது வரை பயிற்சிகள் எடுக்கும் போது அவரும் விராட் கோலியும் சிரித்த முகமாக இருப்பதுடன் சமீபத்தில் நேருக்கு நேர் அமர்ந்து பேட்டியும் கொடுத்தனர். அந்த நிலையில் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருவதால் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி சுமூகமாக இருப்பதாக முன்னாள் வங்கதேச வீரர் தமீம் கூறியுள்ளார்.

ஆனால் அடுத்தடுத்து 2 தொடர்களில் தோல்வியை சந்திக்கும் போது தான் கௌதம் கம்பீரின் உண்மையான குணம் இந்திய ரசிகர்களுக்கு தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி தலைமையில் இந்தியா நிறைய வெற்றிகளை பெற்றுள்ளது. அது தற்போது அப்படியே தொடர்கிறது”

- Advertisement -

உண்மையான கேரக்டர்:

“எனவே வெற்றி நடையில் நீங்கள் மாற்றங்களை செய்ய மாட்டீர்கள். அதே சமயம் புதியவராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் உங்களுடைய சொந்த வழியை கொண்டு வருவது முக்கியம். தற்சமயத்தில் இந்திய அணியிலிருந்து வீரர்கள் ரிலாக்ஸாக இருப்பதாகவும் டெஸ்ட் போட்டிகளை வெல்லும் எண்ணத்துடன் இருப்பதாகவும் கதைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன”

இதையும் படிங்க: புதிய ஆஸ்திரேலிய அணி பழைய ஏமாற்றும் குணமா? இங்லிஷை விளாசிய இங்கிலாந்து ரசிகர்கள் காரணம் என்ன?

“அப்படி வெற்றி நடை போடும் போது ஒரு மனிதரின் உண்மையான குணம் வெளிப்படாது. ஒரு தொடரில் நீங்கள் தோற்று மற்றுமொரு தொடரில் தொடர்ச்சியாக தோற்கும் போது தான் உண்மையான கேரக்டர் வெளியே வரும். இந்திய அணியை கம்பீர் வெற்றிகரமாக வழி நடத்தும் திறனை கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இப்போதே அவரை வெற்றிகரமானவர் என்று சொல்ல முடியாது. இந்தியா ஒரு மோசமான தோல்வியை சந்திக்கட்டும். பின்னர் என்ன வருகிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.

- Advertisement -