மீண்டும் திட்டம் போட்டு காய் நகர்த்திய சிஎஸ்கே அணியை விளாசும் தமிழக ரசிகர்கள்.. காரணம் என்ன?

Ameer Rizvi
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடருக்கான வீரர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக் கோப்பையில் அசத்திய நியூசிலாந்தின் டார்ல் மிட்சேல், ரச்சின் ரவீந்தரா ஆகியோரை 14, 1.8 கோடிக்கு வாங்கியது. அதே போல ஷார்த்துல் தாக்கூரை மீண்டும் வாங்கிய சென்னை அமீர் ரிஸ்வி எனும் இந்திய வீரரை 8.4 கோடிக்கு சென்னை வாங்கியது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் பொதுவாகவே அனுபவத்துக்கு மதிப்பு கொடுத்து மூத்த வீரர்களை வாங்கக்கூடிய சென்னை இதுவரை உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 20 வயது நிரம்பிய அவரை அதுவும் 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் லோயர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதன் காரணமாக வருங்காலங்களில் ஃபினிஷிங் செய்வதற்கு அவரை சென்னை வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தமிழக ரசிகர்கள் கோபம்:
அது தான் தற்போது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடம் சென்னை அணி நிர்வாகத்தின் மீது மீண்டும் கோபத்தை ஏற்படுத்த வைக்கிறது. அதாவது தமிழகத்தின் தலைநகரான சென்னையை பெயரில் வைத்துள்ள சிஎஸ்கே கடந்த சில வருடங்களாகவே தமிழக வீரர்களுக்கு பெயருக்காக கூட வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறது.

குறிப்பாக பாபா அபாரஜித்தை பெஞ்சில் அமர வைத்தே கழற்றி விட்ட சென்னை ஹரி நிஷாந்த், நாராயன் ஜெகதீசன் ஆகியோருக்கும் பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்காமல் கடந்த வருடம் விடுவித்தது. அந்த சூழ்நிலையில் ஃபினிஷிங் செய்வதற்காக உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் வீரரை வாங்கிய சென்னை ஏன் அவரை விட தரத்திலும் அனுபவத்திலும் ஒரு படி உயர்ந்து நிற்கும் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கானை வாங்கவில்லை என்பதே தற்போது தமிழக ரசிகர்களின் கோபமாக இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக வெறும் 20 லட்சத்திற்கு பங்கேற்ற அந்த உத்தரபிரதேச வீரரை சிஎஸ்கே 8.40 கோடி வரை கடுமையாக போட்டி போட்டு வாங்கியது. இருப்பினும் 2021 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து ஐபிஎல் தொடரிலும் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தமிழகத்தின் ஃபினிஷராக ரசிகர்களால் பாராட்டப்படும் சாருக்கானை வாங்குவதற்கு குஜராத், பஞ்சாப் ஆகிய அணிகள் போட்டியிட்டன.

இதையும் படிங்க: 2024 உலகக் கோப்பையில் நாட்டின் வெற்றிக்கு போராடிய ஷமிக்கு.. கௌரவ விருதை அறிவித்த இந்திய அரசு

ஆனால் அப்போது பெயருக்காக கூட சென்னை வாங்க முயற்சிக்காததால் கடைசியில் ஷாருக்கான் 7.4 கோடிக்கு குஜராத் அணிக்காக வாங்கப்பட்டார். அந்த வகையில் 8.40 கோடிக்கு வாங்கப்பட்ட உத்தர பிரதேச வீரரை விட ஒரு கோடி குறைவாகவே கிடைத்த சாருக்கானை தமிழக வீரர்களை வாங்கக்கூடாது என்ற காரணத்தால் திட்டமிட்டு காய் நகர்த்தி சென்னை வாங்க முயற்சிக்கவில்லை என்று தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement