வீடியோ : அபார கேட்ச் பிடித்த ஜெகதீசன், மீண்டும் க்ளாஸ் காட்டிய சுதர்சன் – குஜராத்துக்காக விஜய் சங்கர் மிரட்டல் சாதனை

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விலகிய நிலையில் தற்காலிகமாக வழி நடத்தும் ரசித் கான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதே போல கொல்கத்தா அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தொடக்க வீரர் நாராயண ஜெகதீசன் சேர்க்கப்படுவதாக கேப்டன் நித்திஷ் ராணா அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு அதிரடியை துவக்க முயற்சித்த ரிதிமான் சஹா சுனில் நரைன் வீசிய 5வது ஓவரின் 2வது பந்தில் ஸ்வீப் ஷாட் அடித்து பவுண்டரியை விளாசினார். ஆனால் சரியாக கனெக்ட் ஆகாத அந்த பந்து கேட்ச்சாக மாறிய நிலையில் உள்பட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த நாராயணன் ஜெகதீசன் பந்தின் வேகத்திற்கு நிகராக வேகமாக ஓடிச் சென்று டைவ் அடித்து தாவி கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

வர்ணையாளர்களும் ரசிகர்களும் பாராட்டிய அந்த சிறப்பான கேட்ச்சால் ரிதிமான் 3 பவுண்டரியுடன் 17 (17) ரன்களில் சஹா நடையை கட்டிய நிலையில் அடுத்து களமிறங்கி தமிழக வீரர் சாய் சுதர்சன் மறுபுறம் நின்ற சுப்மன் கில்லுடன் கைகோர்த்து நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அதில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி 12 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்துக்கு தேவையான தொடக்கத்தை கொடுத்த போது மீண்டும் சுனில் நரேன் சுழலில் 5 பவுண்டரியுடன் 39 (31) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் வந்த அபினவ் மனோகர் 3 பவுண்டரியுடன் 14 (8) ரன்களுடன் அதிரடியாக விளையாட முயற்சித்து சூயஸ் சர்மாவிடம் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய சாய் சுதர்சன் இந்த போட்டியில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு அடுத்து களமிறங்கி மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்து அதிரடியை துவக்க முயற்சித்த போது 3 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (38) ரன்கள் குவித்த போது சுனில் நரேன் சுழலில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் லாக்கி பெர்குசன் வீசிய 19ஆவது ஓவரில் 5 நோ-பால், 2, 6, 4, 6 என மொத்தமாக 25 ரன்கள் விளாசினார்.

அத்தோடு நிற்காமல் ஷார்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அவர் வெறும் 24 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்து 63* (24) ரன்களை 262.50 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி எதிர்ப்புறம் டேவிட் மில்லர் வெறும் 2* (3) ரன்களுடன் இருந்த நிலையில் குஜராத்துக்கு மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் 20 ஓவர்களில் குஜராத் 204/4 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காக விளையாடிய போட்டியிலும் சுமாராக செயல்பட்ட விஜய் சங்கர் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானார். ஆனால் இந்த போட்டியில் அவை அனைத்தையும் உடைக்கும் அளவுக்கு வெறித்தனமாக பேட்டிங் செய்து பினிஷிங் கொடுத்த அவர் தற்போது அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : அந்த சின்ன பையன் மாதிரி அடிங்க இல்லைனா ஐபிஎல் விளையாட வராதீங்க – வார்னரை ஓப்பனாக விமர்சித்த சேவாக்

குறிப்பாக 21 பந்துகளில் அரை சதமடித்த அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். அதே போல ஜெகதீசன் சிறப்பான கேட்ச் பிடித்தது சாய் சுதர்சன் அசத்தலான பேட்டிங் செய்தது தமிழக ரசிகர்களின் மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது

Advertisement