பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இன்று அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 26-வது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணியானது பரபரப்பான இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர அசாம் 50 ரன்களையும், சவுத் ஷாக்கில் 52 ரன்களையும் அடித்து அசத்தினர்.
பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷம்சி 10 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஷம்சி கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய பணி மிகவும் சிறப்பாக இருந்தது. ஏனெனில் துவக்கம் முதலே எங்களது அணியின் வீரர்கள் பாகிஸ்தான அணியை கட்டுப்படுத்தி வந்ததால் என்னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது.
நான் போதுமான வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளேன். சில சமயம் நாம் நினைத்தது நடக்கும் சில சமயம் நடக்காமலும் போகும். இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்து விட்டு வந்து இன்டர்வியூ கொடுப்பேன் என்று நினைக்கவில்லை. கடைசி நேரத்தில் நான் ஒரு பெரிய ஷாட் விளையாடி அது நடக்காமல் போயிருந்தால் நிச்சயம் என்னை சக வீரர்கள் ஓய்வறைக்குள் வர விட்டிருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க : உண்மையிலே சேசிங்ல அந்த சாபம் எங்களுக்கு இருக்குது. த்ரில் வெற்றிக்கு பின்னர் – தெம்பா பவுமா பேட்டி
எனவே நான் பந்தை பார்த்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அந்த வகையில் நான் சிங்கிள் கொடுக்க கேஷவ் போட்டியை முடித்து கொடுத்தார். இந்த வெற்றி எங்களுக்கு மிகச் சிறப்பான நம்பிக்கையை அளித்துள்ளது. இறுதிவரை மகாராஜ் மிகச் சிறப்பாக விளையாடி நம்ப முடியாத வெற்றியை பெற்று தந்தார் என ஷம்சி கூறியது குறிப்பிடத்தக்கது.