உண்மையிலே சேசிங்ல அந்த சாபம் எங்களுக்கு இருக்குது. த்ரில் வெற்றிக்கு பின்னர் – தெம்பா பவுமா பேட்டி

Temba-Bavuma
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களையும் பூர்த்தி செய்ய முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களை குவித்தது. பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தற்போது 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று இந்திய அணியை தாண்டி நல்ல ரன் ரேட்டுடன் முதலிடத்தினை பிடித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் தங்களது நான்காவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென்னாபிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பாவுமா கூறுகையில் :

இந்த போட்டி கடைசி வரை த்ரில்லிங்காக இருந்தது. இறுதி நேரத்தில் மிகவும் குழப்பமாக இருந்தாலும் தற்போது வெற்றிக்கு பின்னர் வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சம்சியை அனைவருமே சிறப்பாக வரவேற்றனர். நீங்கள் ஒரு தென்னாப்பிரிக்க ரசிகராக இருந்தால் நிச்சயம் இந்த வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். எப்பொழுதுமே சேசிங்கின் போது எங்களுக்கு பிரஷர் இருக்கிறது. இதுவரை நாங்கள் அதனை சரியாக நிவர்த்தி செய்து விளையாடவில்லை என்றே நினைக்கிறேன்.

- Advertisement -

எப்போதெல்லாம் சேசிங் செய்கிறோமோ அப்போதெல்லாம் இதே போன்ற நிகழ்வுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் இந்த சூழலை சமாளித்து எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். முதலில் பேட்டிங் செய்யும்போது எங்களுடைய திட்டங்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஆனால் சேசிங் செய்யும் போது அந்த அளவிற்கு தெளிவாக இருப்பதாக என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இன்னும் நாங்கள் சேஸிங்கின் போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

ரபாடா தற்போது நல்ல நிலைமையில் உள்ளார். இன்னும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு இரண்டு நாட்கள் இடைவெளி உள்ளதால் அவர் அதற்குள் பூரண குணமடைந்து அணிக்கு திரும்புவார். ஷம்சி இன்றைய போட்டியில் மிகச்சிறப்பாக பந்து வீசினார். அதேபோன்று இறுதி நேரத்தில் அவர் பேட்டிங்கிலும் எங்களுக்கு அளித்த பங்களிப்பும் வெற்றிக்கு உதவியுள்ளது.

இதையும் படிங்க : அம்பயர் மட்டும் எங்களுக்கு சாதகமா அந்த முடிவை குடுத்திருந்தா நாங்க தான் ஜெயிச்சிருப்போம் – பாபர் அசாம் வருத்தம்

சமூக வலைதளத்தில் ஷம்சியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இன்னும் இரண்டு வாரங்களுக்கும் இது தொடரும். ஆனால் அவர் இன்றைய போட்டியில் ஒரு மூத்த வீரராக இறுதியில் பேட்டிங்கில் வெற்றி பெற்று கொடுத்து ஓய்வறைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement