டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு எப்போது தெரியுமா? – பி.சி.சி.ஐ வெளியிட்ட முக்கிய தகவல்

Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பையை அறிமுகப்படுத்தியது. தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பையை அப்போதைய தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. அதன்பிறகு இதுவரை 7 t20 உலக கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.

Carlos Brathwaite 2016 t20 world cup

- Advertisement -

அவர்களை அடுத்து இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒருமுறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது ஆஸ்திரேலிய மண்ணில் எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர்.

இந்நிலையில் அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கான t20 இந்திய அணியை பிசிசிஐ வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்வு செய்து அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் உட்பட 23 பேர் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் மிகப்பெரிய போட்டி உள்ளது.

- Advertisement -

சிறந்த வீரர்களைக் கொண்ட 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்ய இருக்கின்றனர். ஆசிய கோப்பை முடிந்து நான்கு தினங்களில் இந்த வீரர்களின் தேர்வு நடைபெற இருப்பதால் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் பலருக்கு உலகக்கோப்பை அணிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : இன்றைய கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – உத்தேச பட்டியல்

எப்படியும் செப்டம்பர் 15-ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம் என்பது உறுதி. அதோடு இந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement