IND vs ZIM : இன்றைய கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – உத்தேச பட்டியல்

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது அண்மையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணியானது ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.

Shikhar-Dhawan

- Advertisement -

ஜிம்பாப்வே தலைநகரான ஹராரேவில் பிற்பகல் 12.45 மணிக்கு துவங்கும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வைட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேபோன்று இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை எதிர்கொள்ள ஜிம்பாப்வே வீரர்கள் களமிறங்குகிறார்கள்.

இதன் காரணமாக இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அனுபவ துவக்க வீரரான ஷிகார் தவானுக்கு பதிலாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Shubman Gill

அதேபோன்று இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம் பெற்ற சபாஷ் அகமது அக்சர் பட்டேலுக்கு பதிலாக விளையாட வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த மூன்று மாற்றங்கள் இன்றைய போட்டியில் நிகழலாம் என்று கூறப்படும் நிலையில் அதனை தவிர்த்து பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வரலாற்றில் ஆசிய கோப்பையை வென்று இந்தியாவை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்த கேப்டன்களின் பட்டியல் இதோ

1) சுப்மன் கில், 2) ஷிகார் தவான்/ருதுராஜ் கெய்க்வாட், 3) இஷான் கிஷன், 4) கே.எல் ராகுல், 5) தீபக் ஹூடா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் பட்டேல்/சபாஷ் அகமது, 8) தீபக் சாகர், 9) முகமது சிராஜ், 10) பிரசித் கிருஷ்ணா/ஆவேஷ் கான், 11) குல்தீப் யாதவ்.

Advertisement