ஐபிஎல் விட எங்களின் இந்த தொடர் தான் சிறந்த தொடர் – இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

David-lloyd
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி ஒரு மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மே 22-ஆம் தேதி வரை மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்ற 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க 10 அணிகள் கடும் போட்டியிட்டன. அதில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய 4 அணிகள் மட்டுமே தேவையான வெற்றிகளுடன் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

கடந்த 2008-ல் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட இந்த ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் பல பரிமாணங்களையும் வளர்ச்சியும் கண்டு இன்று உலகின் நம்பர் 1 டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் கடைசி ஓவரில் ரசிகர்கள் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களுடன் தீர்மானிக்க படுவதால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட ஐபிஎல் மிகச்சிறந்த தொடர் என்று பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

நம்பர் ஒன் ஐபிஎல்:
அப்படி தரத்தில் நம்பர் ஒன் இடத்தை எட்டியுள்ள ஐபிஎல் பணத்திலும் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடிகளை பிசிசிஐக்கு வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது. அதன் காரணமாக ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ள பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு அங்கமாக சமீப காலங்களில் உருவெடுத்துள்ளது. இந்த தொடரின் அபார வளர்ச்சியை பார்த்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற பக்கத்து நாடுகளும் தங்கள் நாட்டில் ஆளாளுக்கு ஒரு டி20 தொடர்களை சமீப வருடங்களில் நடத்தி வருகின்றன.

அதிலும் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் எப்படியாவது ஐபிஎல் தொடரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தி வருகிறது. இருப்பினும் பிஎஸ்எல் உட்பட உலகின் எஞ்சிய அத்தனை டி20 தொடரும் ஐபிஎல் தொடரை மிஞ்ச முடியவில்லை. ஆனாலும் அந்த நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் எங்களது நாட்டில் நடைபெறும் தொடர்தான் ஐபிஎல் தொடரை விட சிறந்தது என்று குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அடிக்கடி உருட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

- Advertisement -

டேவிட் லாயிட்:
தற்போது புதிதாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல வர்ணனையாளர் டேவிட் லாய்ட் தங்களது நாட்டில் நடைபெறும் டி20 தொடர் தான் ஐபிஎல் விட சிறந்தது என்று தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நானும் ஐபிஎல் தொடரில் வேலை செய்துள்ளேன். ஆனால் தனியார் அமைப்புகள் நடத்தும் அந்த தொடர் பணக்கார மக்களுக்குத்தான் உதவுகிறது. மறுபுறம் டி20 பிளாஸ்ட் மக்களுக்கானது. அது பணத்தை போட்டிக்குள் கொண்டு வருகிறது. அதன் காரணமாகவே அது மிகச்சிறந்த தொடர் என்று நான் கூறுவேன். ஐபிஎல் என்பது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே பொருத்தமாக அமையும். ஏனெனில் அங்குள்ள வீரர்களை அவர்கள் கடவுளாக பார்க்கின்றனர். ஆனால் அது மிகவும் ஆபத்தானது”

“உலகிலேயே பிளாஸ்ட் தொடர் தான் சிறந்த டி20 தொடர் என்று நினைக்கிறேன். அதில் தரம் மட்டுமல்ல நீண்டகால பாரம்பரியமும் உள்ளது. அது இங்கிலாந்திலுள்ள மக்களை ஒன்று சேர்த்து கிரிக்கெட் காலண்டரில் மிகச்சிறந்த நாட்களை உருவாக்கி மகிழ்ச்சியடைய வைக்கிறது” என்று பேசினார். டி20 ப்ளாஸ்ட் தொடரின் இந்த வருட சீசன் வரும் மே 25-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது.

- Advertisement -

அவர் கூறுவது போல டி20 பிளாஸ்ட் தொடர் சர்வதேச டி20 போட்டிகளுக்கே முன்னோடியாக கடந்த 2003இல் துவங்கப் பட்டது உண்மைதான் என்றாலும் சுமார் 20 வருடங்கள் நெருங்கியும் கூட அந்த தொடரால் உலக அளவில் பிரபலம் அடைய முடியவில்லை. அதிலிருந்தே அந்த தொடரின் தரத்தைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஆண்ட்ரூ சைமன்ஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நல்ல மனிதர், மிஸ் பண்றேன் – மனம் உருகும் பாக் வீரர்

அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிலேயே டி20 பிளாஸ்ட் தான் சிறந்த தொடர் என்று அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் போன்ற பல நட்சத்திர முன்னாள் வீரர்களும் ஐபிஎல் தான் உலகிலேயே மிகச்சிறந்த டி20 தொடர் என்று பலமுறை பாராட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement