அதை காமிச்சா உங்களுக்கு அசிங்கமா போய்டும் சார்.. நிதிஷ் ராணா பதிலால் ஹர்ஷாவுக்கு நேர்ந்த பரிதாபம்

Nitish rana
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி நடைபெற்ற 63வது லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வீச முடியாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. அதனால் போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா புள்ளி வழங்கப்பட்டது. அந்த ஒரு புள்ளியையும் சேர்த்து குஜராத் 13 போட்டிகளில் 11 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

அதன் காரணமாக கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. மறுபுறம் அந்த ஒரு புள்ளியையும் சேர்ந்து கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 19 புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும்.

- Advertisement -

பரிதாப பதில்:
அதே காரணத்தால் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கான அதிர்ஷ்டமான வாய்ப்பு இப்போதே கொல்கத்தாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கொல்கத்தா அணியின் வீரர் நிதிஷ் ராணா இந்த சீசனில் காயம் காரணமாக அனைத்து போட்டிகளிலும் முழுமையாக விளையாடவில்லை. அந்த சூழ்நிலையில் இப்போட்டியின் முடிவில் உங்களுடைய காயம் எப்படி இருக்கிறது? அதை பார்க்க முடியவில்லையே என்று பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே அவரிடம் கேட்டார்.

அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “ஆம் தற்போது காயம் நன்றாக இருக்கிறது. ஆனால் இங்கே அதை கேமரா முன் காண்பிக்க முடியாது. ஏனெனில் அது நடு விரல். இந்த வருடம் 10 போட்டிகளை தவற விட்ட பின் மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அது எனக்கு மிகவும் சவாலான நேரமாகும். கொல்கத்தா அணிக்காக விளையாடாமல் இவ்வளவு போட்டிகளில் நான் எப்போதும் அமர்ந்ததில்லை”

- Advertisement -

“இருப்பினும் கொல்கத்தா அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். இப்போதும் என்னால் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறினார். அதாவது நடு விரலில் காயத்தை சந்தித்த காரணத்தால் ஹர்ஷா போக்லே கேட்டதும் அதை கேமரா முன் காண்பித்தால் அது அசிங்கமாக போய்விடும் என்ற வகையில் நித்திஷ் ரானா சொன்னார்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வை அறிவிக்கவுள்ள ரோஹித் சர்மா – இதுதான் காரணமாம்

அவர் அப்படி சொன்னதால் ஹர்ஷா போக்லே வேறு பதில் சொல்ல முடியாமல் பரிதாப நிலையை சந்தித்தார். இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி தன்னுடைய கடைசி போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றில் எதிரணிகளை வீழ்த்தி 2012, 2014க்குப்பின் கோப்பையை வெல்வோமா என்று எதிர்பார்ப்பு கொல்கத்தா ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement