ஆண்ட்ரூ சைமன்ஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நல்ல மனிதர், மிஸ் பண்றேன் – மனம் உருகும் பாக் வீரர்

Symonds
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாதமாகவே மிகப்பெரிய சோகமாக அமைந்து வருகிறது. ஏனெனில் சுழல்பந்து வீச்சின் இலக்கணத்தை மாற்றி பல புதிய பரிணாமங்களை கொண்டு வந்து 1001 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்த ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் 50 வயதிலேயே இயற்கை எய்தினார். அந்த சோகம் முடிவதற்குள் கடந்த வாரம் மற்றொரு ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 46 வயதிலேயே கார் விபத்தால் உலகை பிரிந்தது ஆஸ்திரேலிய மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஜாம்பவான்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவரின் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

கடந்த 1998இல் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா 2 உலக கோப்பையை வெல்வதற்கு ஆல்-ரவுண்டராக கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்று கூறலாம். ஏனெனில் பங்கேற்ற 13 உலககோப்பை போட்டிகளில் 515 ரன்களை 103.00 என்ற அபார சராசரியில் எடுத்த அவர் களமிறங்கிய அந்த 13 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றது.

- Advertisement -

தவறான கண்ணோட்டம்:
அப்படிப்பட்ட அவர் இயற்கையாகவே பார்ப்பதற்கு முரட்டுத்தனமான உடம்பும் ஜடை முடியும் உதட்டில் வெள்ளை நிற சாந்துகளை பூசிக் கொண்டு காட்சியளித்ததால் இவர் முரட்டுத்தனமானவர் என்ற கண்ணோட்டம் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்பட்டது. அதற்கேற்றார் போல் 2009 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது மது அருந்திவிட்டு நடத்தையின்றி நடந்து கொண்டதால் அந்த உலகக் கோப்பையின் ஆரம்பத்திலேயே தாயகத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் 2008இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது மைக்கேல் கிளார்க் தலைமையில் விளையாடிய அவர் பயிற்சி எடுப்பதற்காக போடப்பட்ட அணி மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு தமக்கு பிடித்த மீன் பிடிக்கும் வேலைக்கு சென்றார். அதைவிட 2008இல் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் அவரும் மோதிக்கொண்டது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக இன்றும் அமைந்துள்ளது. அதனால் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் என்றாலே இப்படித்தான் என்பது போன்ற ஒரு தவறான எண்ணங்கள் பெரும்பாலானவர்களின் மத்தியில் காணப்படுகிறது.

- Advertisement -

தவறா புரிஞ்சுக்கிட்டாங்க:
இந்நிலையில் அவரை அனைவருமே தவறான கோணத்தில் பார்த்து தவறாக புரிந்து கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆண்ட்ரூ சைமன்ஸ் ஒரு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கேரக்டர் ஆவார். அவர் நீங்கள் நம்பி நண்பனாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல மனம் கொண்டவர். துரதிஸ்டவசமாக அவரின் கிரிக்கெட் கேரியர் ஒரு சில சர்ச்சைகள் தவறான பிம்பத்தை ஏற்படுத்தியது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர் நாங்கள் இருவரும் நிறைய நேரங்களை கழித்துள்ளோம்”

“நான், ஷேன் வார்னே, ஆன்ட்ரூ சைமன்ஸ், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் 2015இல் அமெரிக்காவில் ஒன்றாக இருந்தோம். அந்த சமயங்களில் நாங்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியுடன் நண்பர்களாக ஜாலியாக இருந்தோம். அந்த வீடியோவை கூட நான் எனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

கடந்த 2015இல் அமெரிக்காவில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்ற ஆல் ஸ்டார் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்றது. அதில் சச்சின் மற்றும் வார்னே தலைமையிலான 2 அணிகளில் சேவாக், சோயப் அக்தர், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் போன்ற பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். அந்த தொடரின் போது அனைவரும் ஒரே நாட்டினரை போல மகிழ்ச்சியுடன் இருந்ததாக சோயப் அக்தர் நினைவு கூர்ந்தார்.

2003இல் அசத்தல்:
ஆண்ட்ரூ சைமன்ஸ் எத்தனையோ சிறந்த போட்டிகளில் விளையாடி இருந்தாலும் கடந்த 2003ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 146/5 என ஆஸ்திரேலியா திணறிய போது வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்டு 125 பந்துகளில் 143* ரன்கள் விளாசியது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. அதனால் தோற்க இருந்த ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பின்னர் கோப்பையை வென்றது.

இதையும் படிங்க : இந்திய அணியில் அவருக்கு ஏன் வாய்ப்பு குடுக்கல. அவரு இன்னும் என்னதான் செய்யணும் – ரசிகர்கள் கொந்தளிப்பு

அந்த சிறந்த இன்னிங்ஸ் பற்றிய சோயப் அக்தர் நினைவு கூர்ந்தது பின்வருமாறு. “2003 உலக கோப்பையில் அவர் எங்களை அடித்து நொறுக்கியது நினைவில் உள்ளது. மிகவும் தாமதமாக வந்த அவர் எங்களை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்தார். அவரின் பேட்டிங்க்கு எதிராக எங்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அந்தப் போட்டியில் தனி ஒருவனாக வென்ற அவர் 2003 உலக கோப்பையில் எங்களின் வெற்றி நடையை தடுத்து நிறுத்திவிட்டார்” என்று பேசினார்.

Advertisement