இந்திய அணியில் அவருக்கு ஏன் வாய்ப்பு குடுக்கல. அவரு இன்னும் என்னதான் செய்யணும் – ரசிகர்கள் கொந்தளிப்பு

IND
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. கடந்த முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு மோசமான தோல்விகளை சந்தித்ததால் இம்முறை இந்த டி20 தொடரில் அவர்களை பழிதீர்க்க காத்திருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி, முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

INDvsRSA

- Advertisement -

அதேபோன்று இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட முழு வீரர்களின் பட்டியலில் பிசிசிஐ மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் சில திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, சாஹல் மற்றும் குல்தீப் போன்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினாலும் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சற்று வருத்தம் என்றே கூறலாம். அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணிக்காக இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

tripathi

இந்த ஐபிஎல் தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிப்பாதி 13 போட்டிகளில் 393 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருடைய சிறப்பு யாதெனில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியிருந்த இவர் இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக 31 வயதான ராகுல் திரிப்பாதிக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மூன்றாம் இடத்தில் களம் இறங்கி விளையாடப் போவது யார் என்ற கேள்வி எழும் வேளையில் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இவருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 31 வயதான ராகுல் திரிப்பாதி 2017-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 1798 ரன்களை குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் வருங்கால ஸ்டார் பிளேயரே இவர்தான். தமிழக வீரை பாராட்டிய – ரவி சாஸ்திரி

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்தமாக 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரரான இவர் அதிரடியாக விளையாடுவது மட்டுமின்றி அணியை நல்ல ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்வார் என்பதனால் நிச்சயம் இவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Advertisement