இந்திய அணியின் வருங்கால ஸ்டார் பிளேயரே இவர்தான். தமிழக வீரை பாராட்டிய – ரவி சாஸ்திரி

Shastri-1
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

PBKS vs SRH

அதேவேளையில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போயுள்ளது. அந்த வகையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை பாராட்டி தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் இந்தியாவின் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மாறப் போகிறார்.

- Advertisement -

நிச்சயம் அவர் இந்திய அணியின் எதிர்காலத்தில் சிறப்பான வீரராக செயல்படுவார். ரவீந்திர ஜடேஜா தற்போது இந்திய அணிக்காக செயல்பட்டு வரும் அதே ரோலில் வாஷிங்டன் சுந்தர் செயல்படுவார். ஜடேஜாவால் இன்னும் மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். இன்னும் ஃபிட்டாக இருந்தால் மேலும் ஒரு ஆண்டு கூடுதலாக அவர் விளையாடுவார். அவரது இடத்திற்கு போட்டியாக அக்சர் பட்டேல் இருக்கிறார். ஆனாலும் வாஷிங்டன் சுந்தரை நான் ஏன் மிகச் சிறப்பான ஆல்-ரவுண்டராக மாறுவார் என கூற காரணம் யாதெனில் :

sundar 1

வாஷிங்டன் சுந்தரால் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படமுடியும். அந்த அளவிற்கு அவருடைய ஆட்டத்திறன் அற்புதமாக உள்ளது. சுந்தர் ஒரு சீரியஸான கிரிக்கெட்டர் அவர் மிகவும் இளமையாக இருப்பதனாலும் போட்டியின் சூழ்நிலையை புரிந்துகொண்டு தனது செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருவதாலும் அவரை நல்ல பிளேயர் என்று நான் குறிப்பிடுகிறேன்.

- Advertisement -

அதோடு அடிக்கடி காயம் அடைவது மட்டும் தான் அவருடைய குறைவாக இருக்கிறதே தவிர அவரது செயல்பாடுகளில் எந்தவித குறையும் எனக்கு தெரியவில்லை. நிச்சயம் அவர் இன்னும் தனது பேட்டிங்கில் முன்னேற்றத்தைக் கண்டு இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக மாறுவார் என்பதில் சந்தேகமே இல்லை என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் டெஸ்ட் டீமில் விளையாட அவர் தகுதியானவர். இளம் வீரருக்கு – முகமது அசாருதீன் ஆதரவு

ரவிசாஸ்திரி கூறியபடியே பவர் பிளே ஓவர்களில் தைரியமாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றும் வாஷிங்டன் சுந்தர் தற்போது பேட்டிங்கிலும் மெல்ல மெல்ல தனது அதிரடியை காட்டி வருகிறார். சிறிதளவு அவருக்கு அனுபவம் கிடைத்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறையிலுமே அவர் தன்னை வலுப்படுத்திக்கொண்டு திரும்பினால் நிச்சயம் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்பதே நமது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement