இந்திய அணியின் டெஸ்ட் டீமில் விளையாட அவர் தகுதியானவர். இளம் வீரருக்கு – முகமது அசாருதீன் ஆதரவு

Azharuddin
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதன் காரணமாக கூடுதலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இளம் வீரர்கள் பலரும் சிறப்பாக பயன்படுத்தி கிரிக்கெட் உலகிற்கு தங்களது வருகையை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்காக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயது வீரர் உம்ரான் மாலிக் பலராலும் பெரிதளவு பாராட்டப்பட்டு வருகிறார்.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசும் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். அதுமட்டுமின்றி வேகத்தோடு கூடுதலாக விக்கெட்டையும் அவர் வீழ்த்தி வருவதனால் இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்தும் அவருக்கு ஆதரவு குவிந்து வந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம்பெற்றார். ஜூன் 9ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் நிச்சயம் உம்ரான் மாலிக் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உம்ரான் மாலிக் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தகுதியானவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்தில் :

- Advertisement -

உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. அது தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். அதிவேகமாக பந்துவீசும் ஒரு பவுலருக்கு அவருக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச்கள் பிடித்த டாப் 5 சிறந்த பீல்டர்கள் – லிஸ்ட் இதோ

இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் பிளேயிங் லெவனிலும் இடம் பெற்று விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement