ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச்கள் பிடித்த டாப் 5 சிறந்த பீல்டர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் நோக்கிலேயே பேட்ஸ்மென்கள் களமிறங்குவார்கள். அதில் பெரும்பாலான போட்டிகளில் பெரும்பாலான தருணங்களில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தெளிவுடன் பேட்டிங் செய்யும் அவர்கள் ஏதேனும் தருணங்களில் தடுமாறி பெரிய ஷாட் அடிக்கும் போது தவறிப்போய் கேட்ச் கொடுப்பார்கள். அதைக் களத்தில் இருக்கும் பீல்டர்கள் சரியாக பிடித்து விட்டால் அதோடு அந்த பேட்ஸ்மேன் அவுட்டாகி செல்ல வேண்டும். ஆனால் தவறிப் போய் விட்டு விட்டால் ஒருசில நேரங்களில் அதையே பயன்படுத்தும் பேட்ஸ்மேன்கள் அந்த அதிர்ஷ்டமான வாய்ப்பை பொன்னாக மாற்றி மலைபோல ரன்களை குவித்து தோல்வியை பரிசளித்து விடுவார்கள்.

Ambati rayudu Catch

அந்த அளவுக்கு களத்தில் பீல்டர்களின் பங்கு வெற்றியை தீர்மானிப்பதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. அதிலும் ஒரு பந்தில் வெற்றி மாறிப்போகும் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் கொடுக்கும் கேட்ச்சை தவறுதலாக கூட விடக்கூடாது. ஏனெனில் அதன்பின் அதை நினைத்து காலத்திற்கும் வருந்தும் அளவுக்கு அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்து கையிலிருந்த வெற்றியைக் கூட பறித்து தோல்வியை பரிசளித்து விடுவார்கள்.

- Advertisement -

இந்த சீசனில் கூட லக்னோவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா இளம் வீரர் அபிஜிட் தோமர் குயின்டன் டி காக் 12 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை பிடிக்க தவறிய பின் 140* ரன்கள் விளாசிய அவர் கேஎல் ராகுலுடன் 210/0 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியை பரிசளித்தது எடுத்துக்காட்டாக கூறலாம். அப்படி களத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கேட்ச் பிடிப்பதற்கு சிறந்த உடல் கட்டு தேவைப்படுவதுடன் அதற்கென்று ஸ்பெஷலான நல்ல திறமையும் தேவைப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 5 பீல்டர்களை பற்றி பார்ப்போம்:

Bravo

5. டயன் ப்ராவோ: மும்பை அணிக்காக ஆரம்ப கட்டத்தில் விளையாடி சென்னை அணியின் நட்சத்திரமாக பெரும்பாலான வருடங்களில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ கடந்த 2013 சீசனில் பைனல் வரை சென்னை விளையாடியதால் பங்கேற்ற 18 போட்டிகளில் 14 கேட்ச்களை பிடித்து இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

அதிலும் ஒவ்வொரு முறை கேட்ச் பிடித்த பின்பும் அவர் போடும் டான்ஸை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மொத்தமாக 161 போட்டிகளில் 80 கேட்ச்களை பிடித்துள்ள அவர் ஆல் டைம் 8-வது இடத்தில் உள்ளார்.

miller

4. டேவிட் மில்லர்: தென் ஆபிரிக்காவின் துடிப்பான நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் கடந்த 2014 சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது அந்த அணி பைனல் வரை சென்ற நிலையில் பங்கேற்ற 16 போட்டிகளில் 14 கேட்ச்களை பிடித்த அவர் இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். மொத்தமாக 103 போட்டிகளில் 58 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார்.

- Advertisement -

3. கைரன் பொல்லார்ட்: ஆரம்பம் முதல் இப்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைரன் பொல்லார்ட் பெரும்பாலும் பவுண்டரி எல்லையின் அருகில் சிக்சருக்கும் பேட்ஸ்மேனுக்கு நடுவே மலைபோல நிற்பார்.

அந்த வகையில் பிளாட் சிக்ஸர்களை அடிக்க முயற்சிக்கும் பேட்ஸ்மென்கள் இவரை தாண்டுவது கடினம் என்ற நிலையில் மும்பை சாம்பியன் பட்டம் வென்ற 2017 சீசனில் பங்கேற்ற 17 போட்டிகளில் 15 கேட்ச்களை பிடித்த அவர் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். மொத்தமாக 189 போட்டிகளில் 103 கேட்ச்களை பிடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

2. ரியன் பராக்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் ரியன் பராக் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் பெரிய சாதிக்கவில்லை என்றாலும் பீல்டராக அசத்தி வருகிறார்.

Riyan Parag Catch

இந்த வருடம் ராஜஸ்தான் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுள்ள நிலையில் பங்கேற்ற 14 போட்டிகளில் 15 கேட்ச்களை பிடித்த இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிப்பதுடன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா (13) ஆகியோரின் சாதனையும் தகர்த்துள்ளார்.

1. ஏபி டீ வில்லியர்ஸ்: தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திரம் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் வகைவகையாக சுழன்று படுத்துக்கொண்டே சிக்ஸர்களை பறக்க விட்டு புது புது ஷாட்டுகளை கண்டுபிடித்து கிரிக்கெட்டை புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்.

ABD

அப்படிப்பட்ட அவர் பீல்டிங்கிலும் சூப்பர்மேனை பறந்து பிடித்த எத்தனை கேட்ச்களை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதிலும் 2016இல் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை நூலிழையில் கோட்டைவிட்ட பெங்களூருவுக்கு விளையாடிய அவர் 16 போட்டிகளில் 19 கேட்ச்கள் பிடித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

Advertisement