கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மே 26-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்று போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
ஏற்கனவே கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள வேளையில் மீதமுள்ள மூன்று இடங்களை நிரப்பபோகும் அணிக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் முக்கியமான நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக அனைத்து அணிகளுக்குமே இந்த செய்தி ஒரு பெரிய பின்னடைவை தந்துள்ளது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடரானது ஜூன் 2-ஆம் தேதி துவங்க இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்களை நாடு திரும்ப கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், பிலிப் சால்ட் மற்றும் மொயின் அலி போன்ற அனைத்து இங்கிலாந்து வீரர்களும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகியோர் லண்டன் திரும்பி இருந்தனர்.
இவ்வேளையில் ஜாஸ் பட்லர் கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவிலிருந்து வெளியேறினார். அதேபோன்று மொயின் அலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் இந்த வாரம் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வை அறிவிக்கவுள்ள ரோஹித் சர்மா – இதுதான் காரணமாம்
இப்படி இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் அனைவரும் வெளியேற இருப்பது உறுதியாகியுள்ளதால் தற்போது பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கும் அனைத்து அணிகளுக்கும் இந்த செய்தி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.