சஹா மட்டுமல்ல என்னையும் காரணம் சொல்லாம தான் கழட்டி விட்டாங்க – புலம்பிய முன்னாள் வீரர்

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26, 27 ஆகிய தேதிகளில் லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இந்த 2 அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

IND

- Advertisement -

இதில் பெங்களூரில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கு இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கழற்றிவிடப்பட்ட சஹா:
இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த சில வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வரும் அனுபவ வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வந்த மூத்த வீரர்கள் ரித்திமான் சகா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.

saha

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சஹா தேர்வு செய்யப்படாதது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் கடந்த சில வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் அதிரடியாக விளையாடி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தனக்கென முத்திரை பதித்துள்ள ரிஷப் பண்ட் நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். ஆனால் அவருக்கு முன்பிலிருந்தே விளையாடி வரும் சஹா அவரைப் போல பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடினார். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் அவரின் பங்கு மிகமிகக் குறைவாக மாறியதை அடுத்து இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாகியுள்ளார்.

- Advertisement -

உச்சத்தில் சஹா:
அத்துடன் 37 வயதை கடந்துவிட்ட காரணத்தால் கேஎஸ் பரத் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நினைக்கும் இந்திய அணி நிர்வாகம் சஹாவுக்கு இனிமேல் வாய்ப்பு கிடையாது என அவரிடம் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. குறிப்பாக இலங்கை தொடர் மட்டுமல்ல ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும் கூட இனி எப்போதுமே இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என தேர்வு குழு தலைவர் சேட்டன் சேர்மா தம்மிடம் தெரிவித்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் சகா வருத்தத்துடன் கூறியிருந்தார்.

wriddhiman saha

இந்நிலையில் தன்னுடைய நாட்களில் உச்சத்தில் விளையாடியபோது காரணமே இல்லாமல் கழற்றி தன்னை விடப்பட்டது போல தற்போது அனுபவ விக்கெட் கீப்பராக உச்சத்தில் விளையாடி வரும் ரித்திமான் சாஹாவை இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டு உள்ளதாக முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சயீத் கிர்மனி குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “சஹாவை சுற்றி பல தரமான வீரர்கள் ஐபிஎல் உட்பட பல்வேறு வகையான போட்டிகளில் தொடர்ந்து போட்டி அளித்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் அவர் சோகமாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அனைவரின் வாழ்விலும் உயர்வு தாழ்வு இருக்குமல்லவா. இந்திய தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் அவரை போன்ற வீரர்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. நான் விளையாடிய காலத்தில் எனக்கும் இதே போன்றதொரு அநீதி இழைக்கப்பட்டது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை” என கூறியுள்ளார்.

Kirmani

நியமில்லாத குமுறல்:
இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “நான் எனது கிரிக்கெட் கேரியரில் உச்சத்தில் இருந்தபோது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து என் மீது தவறு இல்லாதபோதிலும் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டேன். இந்தியாவுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நான் பலமுறை காப்பாற்றியுள்ளேன். ஆனால் இறுதியில் ஒரு சில பத்திரிகைகளில் நான் மோசமாக செயல்பட்டதால் நீக்கப்பட்டேன் என தவறான செய்திகளைப் படித்தேன்” என கூறியுள்ளார். 80களில் இந்தியாவின் முன்னணி விக்கெட் கீப்பராக வலம் வந்த அவர் 88 போட்டிகளில் வெறும் 2579 ரன்களை 27.04 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இருப்பினும் அந்த காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் என்பது உண்மையாக பாராட்டுக்குரியதாகும்.

- Advertisement -

ஆனால் அவரைப்போலவே உச்சத்தில் இருந்தபோது சஹா நீக்கப்பட்டுள்ளார் என சயீத் கிர்மனி கூறுவதில் எந்த நியாயமும் இல்லை என்பதே உண்மையாகும். ஏனெனில் எம்எஸ் தோனி வந்த பின்னர் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் என்றால் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலைமை வந்துவிட்டது.

இதையும் படிங்க : நல்ல பிளேயரே அவர் ஒருத்தர் தான். அவரும் விலகிட்டாரா? – அப்போ இந்திய அணியின் வெற்றி உறுதி

அப்படிப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எதிரணிகளை தெறிக்க விடுகிறார். ஆனால் அவரைவிட அதிக அனுபவம் கொண்டுள்ள ரித்திமான் சஃகா இந்திய மண்ணில் கூட பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறி வருவதாலேயே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமாகும்.

Advertisement