IND vs WI : வாழ்வின் உச்சக்கட்ட பார்மில் உள்ளார், அவரை கெடுக்காதிங்க – ரோஹித் சர்மாவை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளதால் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமநிலை பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் 3-வது போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக இத்தொடரின் 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெஸ்ட் இண்டீசின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பின்னர் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

Thomas

- Advertisement -

இந்த தோல்விக்கு சுமாரான பேட்டிங் என்பதையும் தாண்டி கேப்டன் ரோகித் சர்மாவும் அணி நிர்வாகமும் எடுக்கும் சில முடிவுகள் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இந்த தொடரில் சம்பந்தமே இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கி வருவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இத்தனைக்கும் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து டி20 தொடர்களில் இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வாய்ப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டனர்.

தடுமாறும் சூர்யா:
அதுபோக மிடில் ஆர்டரில் தடுமாறுகிறார் என்பதற்காக வித்தியாசமான முயற்சியாக இங்கிலாந்து டி20 தொடரின் போது ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அப்படி இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹூடா போன்ற சிறப்பாக செயல்பட்டு தொடக்க வீரர்களாக களமிறங்க தயாராக உள்ள வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் சோதனை செய்யப்பட்ட ரிஷப் பண்ட்க்கும் மற்றொரு தொடர்ச்சியான வாய்ப்பு வழங்காமல் 3 – 4 ஆகிய இடங்களில் சிறப்பாக விளையாடக் கூடிய சூர்யகுமார் யாதவ் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார்.

Suryakumar yadhav

அதனால் மிடில் ஆர்டரில் விளையாடி பழக்கப்பட்ட அவர் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள ஓபனிங் இடத்தில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அவருக்கும் இந்தியாவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் எஞ்சிய அத்தனை பேட்ஸ்மேன்களும் தடுமாறிய போது 4-வது இடத்தில் களமிறங்கி தனி ஒருவனாக போராடி சதமடித்து 113 ரன்கள் குவித்து வெற்றிக்காகப் போராடிய அவர் நல்ல பார்மில் இருந்த நிலையில் தற்போது தொடக்க வீரராக களமிறங்கியதும் பார்மை இழந்தது போல் தடுமாறுகிறார். இதனால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இந்த இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று ரோகித் சர்மாவுக்கு கோரிக்கையாக வைக்கிறார்கள்.

- Advertisement -

உச்சக்கட்ட பார்ம்:
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக விளையாட வைத்து கெடுக்க வேண்டாம் என்று ரோகித் சர்மாவுக்கு நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யகுமார் யாதவ் இந்த அணியில் முக்கியமானவர். டி20 உலக கோப்பையில் அவர் எங்கு விளையாடுவாரோ அதே இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதியுங்கள். ஒருவேளை கேஎல் ராகுல் இல்லாததால் ரோகித் சர்மாவுடன் மற்றொரு வீரரை சோதித்து பார்க்க நீங்கள் நினைத்தால் அதற்கு தகுந்த வீரரை தேர்வு செய்து வாய்ப்பளியுங்கள்”

Shastri

“நல்ல பார்மில் இருக்கும் ஒரு வீரர் உலக கோப்பையில் எங்கு பேட்டிங் செய்ய போகிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் அங்கேயே பேட்டிங் செய்ய அனுமதியுங்கள். அதை விட்டுவிட்டு டிங்கரிங் செய்ய வேண்டாம். வேண்டுமானால் 2 விக்கெட்கள் விழுந்த பின்பு அல்லது 5, 6 போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் அவரை சோதித்து பாருங்கள். ஆனால் சூரியகுமார் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் அளவுக்கு தனது வாழ்நாளில் உச்சகட்ட பார்மில் உள்ளார்”

இதையும் படிங்க: IND vs WI : தினேஷ் கார்த்திக் போல செயல்படும் அவரை ஏன் டி20 உ.கோ அணியில் ஒதுக்குறிங்க – சீனியர் பவுலரை ஆதரிக்கும் பார்திவ் படேல்

“அந்த இடத்தின் தடுமாறும் பல வீரர்களுக்கு மத்தியில் அவர் அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாகவும் அபாரமாகவும் பேட்டிங் செய்யும் திறமையையும் யுத்திகளையும் தெரிந்து வைத்துள்ளார். வேண்டுமானால் ரிசப் பண்டை நீங்கள் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கி சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்குப் பின் 4-வது இடத்தில் களமிறங்கும் உத்தேச வீரராக அறியப்படும் சூர்யகுமார் யாதவை அந்த முக்கிய தொடருக்கு முன்பாக இப்படி ஓப்பனிங் இடத்தில் களமிறக்குவது உண்மையாகவே அவருக்கும் இந்தியாவுக்கும் பாதகமான அம்சமாகும்.

Advertisement