IND vs WI : தினேஷ் கார்த்திக் போல செயல்படும் அவரை ஏன் டி20 உ.கோ அணியில் ஒதுக்குறிங்க – சீனியர் பவுலரை ஆதரிக்கும் பார்திவ் படேல்

Parthiv
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடர் சமநிலை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறைஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் 5 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.

Dinesh Karthik Ashwin

- Advertisement -

அதனால் கடந்த 2007க்குப்பின் டி20 உலகக் கோப்பையை தொட முடியாமல் தவித்து வரும் கதைக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்திய அணி நிர்வாகம் சுழற்சி முறையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டிய பினிஷர் இடத்தில் ஐபிஎல் தொடரில் அசத்தி 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பந்துவீச்சு துறை:
பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ராவுடன், புவனேஸ்வர் குமார் விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில் 3 மற்றும் 4-வது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேடலில் ஹர்ஷல் படேல், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங், சிராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அதில் அர்ஷிதீப் சிங் இதுவரை வெறும் 3 போட்டியில் விளையாடினாலும் புவனேஸ்வர் குமார் போல துல்லியமாக பந்துவீசி அசத்தலாக செயல்படுகிறார்.

Shami

ஹர்ஷல் படேல், சிராஜ் ஆகியோரும் ஓரளவு சிறப்பாக செயல்படும் நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் வெறும் 2.2 ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கிய ஆவேஷ் கான் சாதாரண தொடருக்கு கூட சரிப்பட்டு வரமாட்டார் என்பதை நிரூபித்து வருகிறார். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் மற்றொரு சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியும் விளையாட தகுதியானவர் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கடைசியாக துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய அவருக்கு அதன்பின் டி20 அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

கார்த்திக் மாதிரி:
37 வயதை தாண்டிய போதிலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திகை போலவே 31 வயது மட்டுமே நிரம்பிய அவர் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கும் பார்த்திவ் படேல் அவரையும் டி20 உலகக் கோப்பை அணி தேர்வில் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

Parthiv 2

“புவனேஸ்வர் விளையாடும் போது அவர் 2 ஓவர்கள் முதலில் வீச வேண்டும். அடுத்ததாக பும்ரா மற்றும் அர்ஷிதீப். இருப்பினும் முகமது ஷமியை புதிய பந்தின் பந்து வீச்சாளராக அணி நிர்வாகம் ஏன் கருத்தில் கொள்வதில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரை வைத்து தான் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் முகமது ஷமியின் ஆட்டம் ஐபிஎல் தொடரில் அவரைவிட அபாரமாக இருந்தது”

“அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விக்கெட்டுகளை எடுத்து கோப்பையை வென்றுள்ளார். அவரை தேர்வு செய்வது தவறான முடிவாக இருக்காது. அவர் வந்தால் கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய அதே பவுலர்கள் விளையாடுவது போல் தோற்றமளிக்கும். ஆனால் இந்த வீரர்கள் அனுபவத்தில் மேலும் முன்னேறியுள்ளார்கள். கடந்த வருடத்தைவிட மேலும் மெருகேறியுள்ள புவனேஸ்வர் குமார் போல ஷமியும் முன்னேறியுள்ளார். புதிய பந்தில் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட மாட்டார் என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அவர் பஞ்சாப் மற்றும் குஜராத் ஐபிஎல் அணிகளில் அந்த இடத்தில் முன்னேறியுள்ளார்” என்று கூறினார்.

shami 1

அவர் கூறுவது போல கடைசியாக கடந்த டி20 உலக கோப்பையில் விளையாடிய முகமது சமி ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 8.00 என்ற நல்ல எக்கனாமியில் பந்து வீசி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் 31 வயதை கடந்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதாலும் அர்ஷிதீப் சிங், ஹர்ஷல் படேல் போன்ற இளம் பவுலர்கள் வருகையாலும் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அச்சிடப்படாத முத்திரை குத்தப்பட்டது போல் ஒதுக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement