தடுமாறும் அவருக்கு சான்ஸ் கொடுங்க, ஆண்ட்ரூ சைமன்ஸ் மாதிரி 2023 உ.கோ வென்று கொடுப்பாரு – இந்திய வீரருக்கு பாண்டிங் ஆதரவு

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்திய மண்ணிலேயே நடைபெறும் இந்த தொடரில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக ஜொலிக்கும் இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு 2011க்குப்பின் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி தொடரை வெல்லாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதற்கு தேவையான வீரர்களை கண்டறியும் வேலைகள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்களை மிஞ்சி மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

சைமன்ஸ் மாதிரி:
குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுகிறார்கள். ஆனால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பன் முதலே திண்டாடும் அவர் கடந்த 14 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனை படைத்த அவர் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வருடங்களாகியும் இதுவரை 1 சதம் கூட அடிக்கவில்லை.

Andrew Symonds Aus

இதனால் இவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று தெரிவிக்கும் பெரும்பாலான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் மேடு பள்ளங்கள் இருப்பது சகஜம் என்று தெரிவிக்கும் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளை ஆஸ்திரேலியா தமது தலைமையில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சமீபத்தில் மறைந்த ஆண்ட்ரூ சைமன்ஸ் போல வாய்ப்பும் ஆதரவும் கொடுத்தால் நிச்சயம் சூரியக்குமார் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வீரர்களும் தங்களது கேரியரில் இது போல மேடு பள்ளங்களை கடந்தாக வேண்டும். அதாவது இதற்கு முன்பாக ஒரு தொடரின் 3 போட்டிகளிலும் ஒரு வீரர் முதல் பந்திலேயே தொடர்ந்து டக் அவுட்டானதை பார்த்ததாக எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது போன்ற மேடு பள்ளங்களை நாம் பார்த்துள்ளோம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் நிச்சயமாக மேடு பள்ளங்கள் இருக்கும். கடந்த 12 – 18 மாதங்களில் அவர் அபாரமாக விளையாடினார்”

Ponting

“அதனால் இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சூரியகுமாரால் என்ன செய்ய முடியும் என்பது நன்றாக தெரியும். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் தான் உங்களுக்கு உலக கோப்பையை வென்று கொடுப்பார்கள். தற்போது வேண்டுமானால் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். ஆனால் அவரை போன்றவர் தான் பெரிய போட்டிகளை வென்று கொடுக்கும் திறமை உடையவர்கள்”

இதையும் படிங்க:IPL 2023 : கல்யாணத்துக்கு போயிட்டு வந்துறேன், பாதியிலேயே வெளியேறும் நட்சத்திர ஆஸி வீரர் – டெல்லிக்கு பின்னடைவு

“குறிப்பாக சமீபத்தில் மறைந்த ஆண்ட்ரூ சைமன்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு பங்காற்றியதை போல் செயல்படும் திறமை கொண்டவர். எனவே இந்தியாவின் கண்ணோட்டத்தில் நான் அவ்வாறு தான் பார்க்கிறேன். நான் எப்போதுமே பாதுகாப்பாக விளையாடும் வீரர்களை விரும்ப மாட்டேன். மாறாக மேட்ச் வின்னிங் வீரர்களை தான் தேர்ந்தெடுப்பேன். அந்த வகையில் அவர் மேட்ச் வின்னர் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement