IPL 2023 : கல்யாணத்துக்கு போயிட்டு வந்துறேன், பாதியிலேயே வெளியேறும் நட்சத்திர ஆஸி வீரர் – டெல்லிக்கு பின்னடைவு

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள 10 அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் தங்களுடைய முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் நட்சத்திரம் களமிறங்கியுள்ளது. ஆனால் அந்த அணிக்கு கேப்டன் ரிசப் பண்ட் காயத்தால் விளையாடாதது ஏற்கனவே பின்னடைவாக அமைந்த நிலையில் தற்காலிகமாக ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் வழி நடத்தி வருகிறார். இருப்பினும் அவரது தலைமையில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட டெல்லி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 8 இடத்தில் திண்டாடி வருகிறது.

அந்த அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் பெரிய ரம்களை எடுத்தாலும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்க தடுமாறுகிறார். ஆனால் பிரிதிவி ஷா, சர்ப்ராஸ் கான் போன்ற இளம் இந்திய வீரர்கள் சுமாராக செயல்பட்டு வரும் நிலையில் மிட்சேல் மார்ஷ், ரிலீ ரோசவ், ரோவ்மன் போவல் போன்ற வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் ஏமாற்றமான செயல்பாடுகளையே வெளிப்படுத்தினர். அதே போல் பந்து வீச்சு துறையிலும் அந்த அணி தடுமாற்றமாகவே செயல்படுகிறது.

- Advertisement -

கல்யாணதுக்கு பயணம்:
அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அக்சர் படேல், குல்தீப் யாதவ் போன்ற ஒருசில இந்திய வீரர்களின் நல்ல பங்களிப்பு இதுவரை டெல்லிக்கு வெற்றியை கொடுக்காமல் இருந்து வருகிறது. அதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள டெல்லி அணியிலிருந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் திருமணத்திற்காக நாடு திருப்புவதாக அறிவித்துள்ளார். தற்போது 31 வயதாகும் அவர் இது பற்றி டெல்லி அணி நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி கேட்டதாக தெரிகிறது.

அதை ஏற்றுக்கொண்ட டெல்லி நிர்வாகம் அனுமதி கொடுத்ததால் நாடு திரும்பும் மிட்சேல் மார்ஷ் குறைந்தது அடுத்த 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் அறிவித்துள்ளார். இருப்பினும் வாழ்வின் முக்கிய நிகழ்வான திருமணத்தை முடித்துக் கொண்டு முடிந்தளவுக்கு விரைவில் அவர் அணியுடன் இணைந்து விடுவார் என்று தெரிவிக்கும் ஹோப்ஸ் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மார்ஷ் அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் திருமணத்திற்காக நாடு செல்ல உள்ளார். சமீபத்திய இந்திய ஒருநாள் தொடரில் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரிலும் அதே வகையில் பயன்படுத்த நினைத்தோம். ஆனாலும் அது தாமதமானது. இருப்பினும் இந்திய ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அவர் மீண்டும் டெல்லி அணியுடன் இணையும் போது பந்து வீசுவதற்கு முழுமையான வாய்ப்பை பெறுவார்”

“மேலும் 140 – 150க்கும் மேற்பட்ட வேகத்தை முதல் முறையாக எதிர்கொள்ளும் சில இளம் வீரர்கள் எங்களது அணியில் இருக்கின்றனர். அவர்கள் அதை விரைவாக கற்பதற்காக முயற்சித்து வருகிறார்கள். எனவே விரைவில் அதை எதிர்கொள்ள தங்களை தயார் செய்து கொண்டு அவர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். மேலும் அபிஷேக் போரேல் ஸ்பெஷல் திறமையுடையவர். குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் அசத்திய அவர் விக்கெட் கீப்பராகவும் தனது வேலையை கச்சிதமாக செய்தார். நல்ல விக்கெட் கீப்பரான அவர் வேகமாக வரும் பந்துகளையும் சிறப்பாக பிடிக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அவரால இந்திய அணிக்கு கண்டிப்பா உலககோப்பையை வாங்கி தரமுடியும் – ரிக்கி பாண்டிங் கருத்து

ஏற்கனவே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள டெல்லிக்கு மிட்சேல் மார்ஷ் போன்ற தரமான ஆல் ரவுண்டர் அடுத்த 2 போட்டியில் விளையாட மாட்டார் என்பது நிச்சயமாக பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் இருக்கும் சமநிலையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம். இருப்பினும் நிலைமையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள டெல்லி அடுத்ததாக ஏப்ரல் 8ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் தன்னுடைய 3வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement