அவரால இந்திய அணிக்கு கண்டிப்பா உலககோப்பையை வாங்கி தரமுடியும் – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 50 உலகக் கோப்பை வென்ற பின் எந்த ஒரு கேப்டனாலும் ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

இம்முறை இந்தியாவில் உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருப்பதனால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்திய அணியும் தற்போது தங்களது அணி வீரர்களை பட்டையை தீட்டி வருகிறது.

ஆனாலும் நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரை வென்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க இந்திய அணியும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த உலகக் கோப்பை தொடருக்காக சூரியகுமார் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து ஆதரவு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SKY 1

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் ஒயிட் பால் கிரிக்கெட்டில் எவ்வளவு அதிரடியான வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவினை வழங்க வேண்டும். அப்படி அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்தால் நிச்சயம் அவரால் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுக்க முடியும்.

அவரது பேட்டிங் தற்போது கொஞ்சம் சீரற்ற வகையில் இருக்கலாம். ஆனால் முக்கியமான போட்டிகளில் அவரால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலியா அணிக்காக சைமன்ட்ஸ் எப்படி தனது பங்களிப்பை வழங்கினாரோ அதேபோன்று இந்திய அணிக்காக சூரியகுமார் யாதவால் அற்புதமான பங்களிப்பை வழங்க முடியும்.

இதையும் படிங்க : வீடியோ : 2011 உ.கோ ஃபைனல் சிக்ஸர் அடித்த கேப்டன் தோனிக்கு வான்கடே மைதானம் கொடுத்த வரலாற்று கெளரவம்

அவரை போன்ற வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்தால் நிச்சயம் அவர் தனி ஒரு வீரராக இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார். அந்த அளவிற்கு அவர் ஒரு சூப்பர் மேட்ச் வின்னர் என ரிக்கி பாண்டிங் சூரியகுமார் யாதவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement