யுவ்ராஜ் சிங்கின் அந்த சாதனைக்காக தான் ஆடுனேன். ஆனா மிஸ் ஆயிடுச்சி – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் நான்காவது லீக் போட்டி நேற்று முன்தினம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த விராட் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 26 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 68 ரன்களையும் குவித்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

HK

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் ரன் குவிப்பை மின்னல் வேகத்தில் உயர்த்தினார். அதிலும் குறிப்பாக போட்டியின் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ரசிகர்களை பரவசப்படுத்தினார். இந்நிலையில் அவரது இந்த இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியனை நோக்கி சூரியகுமார் யாதவ் திரும்புகையில் விராட் கோலி நெஞ்சில் கை வைத்து சிரம் தாழ்த்தி சூர்யகுமார் யாதவுக்கு மரியாதை செய்தார். மேலும் அவருக்கு கை குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலி இப்படி சூரியகுமார் யாதவிற்கு மரியாதை அளித்தது இணையத்தில் வீடியோவாக வைரலாகியது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பேசியிருந்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : கோலியின் செயல் என்னை நெகிழ வைத்துவிட்டது. இதற்கு முன்பு நான் இதுபோன்ற ஒரு அனுபவத்தை கண்டதில்லை. இன்னிங்ஸ் முடிந்ததும் அவர் எனக்கு முன்னால் நடந்து செல்லாமல் நின்று கொண்டிருக்கிறார் என ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு அவர் சேர்ந்து செல்வோம் என என்னிடம் கூறினார்.

Suryakumar Yadav

அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்தடுத்த பந்துகளை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்து நிறைய பேசினோம். கோலியுடன் 20 ஓவர் போட்டிகளில் அதிகம் சேர்ந்து விளையாடியதில்லை. தற்போது கிடைத்துள்ள இந்த அனுபவம் முக்கியமானது என்று சூரியகுமார் யாதவ் கூறினார். அவரது ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளில் எத்தனையோ முறை நான் சூரியகுமார் யாதவ் இப்படி விளையாடி பார்த்து இருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் இப்பொழுது அருகில் இருந்து அவரை பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவரால் உலகின் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிரடியாக விளையாட முடியும் என்று நம்புவதாக விராட் கோலி கூறினார். இந்நிலையில் இந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடிக்க முயற்சித்தேன் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடைசி ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விரட்ட முயற்சித்தேன்.

இதையும் படிங்க : பழைய ஃபார்மை மீட்டெடுக்க ஆரம்பிச்சுட்டாரு, இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது – விராட் கோலிக்கு முன்னாள் பாக் வீரர் ஆதரவு

ஆனால் முதல் மூன்று பந்துகளை சிக்சர் அடித்த நான் நான்காவது பந்தில் சிக்சர் அடிக்க முடியாமல் போனது. அதனால் என்னால் யுவராஜ் சிங்கின் சாதனையை கடக்க முடியவில்லை என கூறி சிரித்தார். என்னை பொறுத்தவரை எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை மட்டுமே தான் நினைப்பதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement