
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நவம்பர் எட்டாம் தேதி டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்கா சென்றடைந்து தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அடுத்தடுத்து வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வேளையில் தென்னாப்பிரிக்க மண்ணிலும் டி20 தொடரை கைப்பற்றி ஹைட்ரிக் தொடர் வெற்றியை நிகழ்த்த காத்திருக்கிறது.
இந்த தொடரில் முற்றிலும் இளம் வீரர்கள் விளையாடுவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூரியகுமார் யாதவ் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு புதிய சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 4 சதம் மற்றும் 21 அரைசதம் என 2544 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 346 ரன்களை குவித்துள்ளார்.
இவ்வேளையில் இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் மேலும் அவர் 107 ரன்களை அடித்தால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயானா டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டேவிட் மில்லரின் 452 ரன்கள் என்கிற சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார்.
இதையும் படிங்க : 15 வருடம்.. நியூஸிலாந்திடம் தோத்தா என்ன? இதை செஞ்சுட்டு ஆஸி போங்க.. இந்தியா ஜெய்க்கும்.. கபில் தேவ் அட்வைஸ்
அதோடு இந்த தொடரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தால் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்துவார். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 74 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 144 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.