15 வருடம்.. நியூஸிலாந்திடம் தோத்தா என்ன? இதை செஞ்சுட்டு ஆஸி போங்க.. இந்தியா ஜெய்க்கும்.. கபில் தேவ் அட்வைஸ்

Kapil Dev
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளை நன்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே தோற்றுள்ள இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் மீண்டும் வெல்லுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணியினர் அறைக்குள் அமர்ந்திருப்பதில் அர்த்தம் இல்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் இந்திய அணியினர் நியூசிலாந்து தோல்வியை முற்றிலும் மறந்து விட்டு அதிகமாக பயிற்சிகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். அப்படியே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் இப்போதும் நம்மால் வெல்ல முடியும் என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான் வாழ்த்து:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் அடிப்படைக்குச் செல்லுங்கள். பயிற்சி, பயிற்சி, பயிற்சிகளை எடுங்கள். நான் அறையில் அமர்ந்து கொண்டு முன்னேறுவேன் என்று சொன்னால் அது நடக்கப் போவதில்லை. ஒருவேளை நீங்கள் மோசமான காலங்களில் இருந்தால் அதிகமாக எடுக்கும் பயிற்சிகள் உங்களை சிறந்தவராக மாற்றும். விராட் கோலி, ரோஹித் சர்மா 15 வருடங்கள் விளையாடி தங்களை நிரூபித்தவர்கள்”

“அவர்கள் சிறந்த வீரர்கள். சில நேரங்களில் இது அதிகமாக கவனம் செலுத்துவதை பற்றியதாகும். எனவே கடந்த தொடரை மறந்து விட்டு களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என்று அவர்களுக்கு நான் சொல்வேன். இந்தத் தொடரை நீங்கள் மறந்து விட்டு பார்த்தால் மற்றபடி இந்திய அணியினர் நன்றாகவே செயல்பட்டுள்ளார்கள்”

- Advertisement -

நம்மால் முடியும்:

“எனவே இந்திய அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களிடம் இருக்கும் பிரச்சினைகளை வேகமாக சரி செய்து கொள்வது முக்கியம். நாம் நம்முடைய பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள், பவுலர்கள் ஆகியோரால் பெருமை அடைகிறோம். பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்காக அவர்களுக்கு நான் நல்ல வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கடினமான காலங்கள் முடிந்து விட்டன”

இதையும் படிங்க: இந்திய அணியில் நான் இருந்தா ஆஸியை பாத்து பயப்டுவேன்.. ஆனா அவங்க விடமாட்டாங்க.. வார்னர் பேட்டி

“தற்போது நீங்கள் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். இதுவே நான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு சொல்லும் செய்தியாகும். நம்முடைய இந்திய அணிக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார். அந்த வகையில் ஜாம்பவானின் வாழ்த்துடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement