இந்திய அணியில் நான் இருந்தா ஆஸியை பாத்து பயப்டுவேன்.. ஆனா அவங்க விடமாட்டாங்க.. வார்னர் பேட்டி

David warner
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விரைவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் தங்களுடைய சொந்த மண்ணிலேயே நியூசிலாந்திடம் ஒயிட் வாஸ் தோல்வியை முதல் முறையாக சந்தித்த இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்துள்ள இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்திடம் சந்தித்த படுதோல்வியால் தாம் இந்திய அணியில் இருந்தால் ஆஸ்திரேலிய பவுலர்களை நினைத்து பயப்படுவேன் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். அதே சமயம் ரோஹித், கோலி, அஸ்வின் ஆகியோர் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

எனவே அவர்கள் வெற்றியுடன் கேரியரை முடிக்க விரும்புவார்கள் என்பதால் ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கு போராடுவார்கள் என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினர் அபாரமான கேட்சுகளை பிடித்து அசத்தினார்கள். அப்படி அற்புதமாக விளையாடி வெற்றி கண்ட அவர்களுக்கு நான் பாராட்டு கொடுக்க விரும்புகிறேன்”

“அது ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் உதவும். 3 – 0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணியினர் 3 உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர் அடங்கிய ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளார்கள். எனவே நான் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருந்தால் அதை நினைத்து கொஞ்சம் பயப்பட்டு பதற்றமடைவேன்”

- Advertisement -

வார்னர் கருத்து:

“அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க வேண்டும். முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து வரலாம். ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ் ஆகிய தரமான பவுலர்கள் அவர்களிடம் உள்ளார்கள். எனவே அவர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவித்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்கு நாம் இந்தியாவுக்கு எதிராக இதயத்துக்கு நேராக மோத வேண்டும்”

இதையும் படிங்க: பார்ம்ல இல்லனாலும் அவங்க இரண்டு பேரும் ரொம்ப டேஞ்சர் தான் – ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து

“ஏனெனில் கடந்த 2 தொடர்களில் இங்கே நாம் இந்தியாவிடம் தோற்றோம். ஆஸ்திரேலியா அணியை போலவே இந்திய அணிலும் வயதான வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அஸ்வின், ஜடேஜா, விராட் கோலி, ரோஹித் ஆகியோர் தங்களுடைய கேரியரின் கடைசி கட்டங்களில் உள்ளார்கள். எனவே அவர்கள் தங்களுடைய கேரியரை உச்சமாக முடிக்க விரும்புவார்கள். அதனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி வெற்றி காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கே வருவார்கள் என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார்.

Advertisement