பார்ம்ல இல்லனாலும் அவங்க இரண்டு பேரும் ரொம்ப டேஞ்சர் தான் – ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து

Cummins
- Advertisement -

அண்மையில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க இருக்கிறது.

ரோஹித் மற்றும் கோலி இருவருமே ஆபத்தானவர்கள் :

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளதால் ஆஸ்திரேலிய தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறமுடியும் என்பதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கிய தொடராக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ம் அவுட்டாக இருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது ஆட்டம் அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ள வேளையில் அவர்கள் இருவருமே அபாயகரமான வீரர்கள் தான் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மினிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது பார்ம் குறித்து எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வரும் அனைவருக்குமே ஏற்ற இறக்கம் என்பது வருவது சாதாரண விடயம் தான். என்னை பொருத்தவரை அவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

- Advertisement -

பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் அவர்கள் நிச்சயம் இந்த தொடரில் தங்களது பார்மை மீட்டெடுக்க முயற்சிப்பார்கள். எனவே எங்களுடைய முதல் நோக்கம் இந்திய அணியின் வீரர்களை ரன் குவிக்க விடாமல் களத்தில் அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான். அவர்கள் இருவருமே பார்மில் இல்லை என்றாலும் மிகவும் அபாயகரமான வீரர்கள்.

இதையும் படிங்க : இந்த மைதானத்தை பார்த்ததும் யுவ்ராஜ் சிங் நியாபகம் தான் வந்தது – அபிஷேக் ஷர்மா பூரிப்பு

அதேபோன்று ரிஷப் பண்ட் கடந்த காலங்களில் எங்களது அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய ரன்களை குவித்திருக்கிறார். எனவே அவரையும் அமைதியாக வைத்திருக்க சில திட்டங்களை திட்டி வருகிறோம். அவர் களத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தால் அவருக்கு எதிராக எங்களது திட்டத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement