இந்த மைதானத்தை பார்த்ததும் யுவ்ராஜ் சிங் நியாபகம் தான் வந்தது – அபிஷேக் ஷர்மா பூரிப்பு

Abhishek
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருப்பதற்காக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நாளை கிங்ஸ் மீட் மைதானத்தில் துவங்குகிறது.

டர்பன் மைதானத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சி :

இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு கிங்ஸ்மீட் டர்பன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குவதால் இந்த போட்டி எவ்வாறு இருக்கும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்க காத்திருக்கிறார். இந்நிலையில் நாளைய போட்டிக்கு முன்பாக பேட்டியளித்துள்ள அபிஷேக் சர்மா கூறுகையில் : இந்த டர்பன் மைதானத்தை பார்த்தபோதே எனக்கு யுவராஜ் சிங் தான் ஞாபகத்தில் வந்தார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அவர் அடித்த ஆறு சிக்ஸர்களை நான் இதற்கு முன் டிவியில் பார்த்து உள்ளேன். தற்போது அதே மைதானத்தில் விளையாட இருப்பது கனவு போல் உள்ளது. நான் இந்த மைதானத்திற்கு வந்ததும் யுவராஜ் சிங் எந்த முனையில் இருந்து அந்த ஆறு சிக்ஸர்களை அடித்தார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன்.

- Advertisement -

அவர் அன்று விளையாடிய ஆட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த ஆட்டத்தை நான் எனது குடும்பத்தாருடன் டிவியில் பார்த்தேன். தற்போது அதே இடத்தில் நான் இங்கு விளையாட இருப்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் நாளை நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை பெருமை அடையச் செய்வேன் என அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இனிமே தான் ஆட்டமே இருக்கு.. விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் – ஜோதிடர் பதில்

வங்கதேச அணிக்கெதிராக கடந்த மாதம் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே விளையாடி இருந்தனர். அந்தவகையில் அந்த கூட்டணியே இந்த தொடரிலும் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement