இனிமே தான் ஆட்டமே இருக்கு.. விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் – ஜோதிடர் பதில்

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த காலங்களில் ரன் மெஷினாக திகழ்ந்து வந்த விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே ரன்குவிக்க தடுமாறி வருவதோடு மட்டுமின்றி எளிதாக தனது விக்கெட்டையும் இழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியின் ஓய்வு எப்போது :

ஆனாலும் அவர் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணிகள் இடம் பிடித்துள்ள விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. ஏனெனில் தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர் எவ்வளவு தூரம் விளையாடுவார்? என்பது உறுதியாக தெரியாது. இதன் காரணமாக விராட் கோலி என்ன முடிவு செய்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலியின் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜோதிடர் கூறுகையில் : சமீப காலமாகவே என்னிடம் விராத் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான் : மக்கள் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரை விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.

இதையும் படிங்க : இதெல்லாம் சகஜம்.. ருதுராஜுக்கு நேரம் வரும்.. தோற்றாலும் ரோஹித்திடம் இதை கத்துக்கிறேன்.. சூரியகுமார் பேட்டி

இனிவரும் சில ஆண்டுகள் தான் விராட் கோலி தனது உச்சகட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதனால் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்களது நட்சத்திர வீரர் அசத்துவார் என அந்த ஜோதிடர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement