லக்னோ மைதானத்தின் தன்மை குறித்து பேசிய பாண்டியாவிற்கு ரிப்ளை கொடுத்த – சூரியகுமார் யாதவ்

SKY-and-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் இந்த மைதானம் விளையாடுவதற்கு சிரமமாக இருந்தது என்றும் இந்த ஆடுகளம் எங்களுக்கு ஷாக்கிங் ஆக இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியிருந்தார்.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

மேலும் போட்டி முடிந்தவுடன் தனது அதிருப்தியை தெரிவித்த அவர் : இந்த மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. அதேபோன்று ஒரு சர்வதேச போட்டியில் நடைபெறுவதற்கு முன்னர் சரியான முறையில் மைதானத்தை தயாரித்து இருக்க வேண்டும் என்றும் ஹார்டிக் பாண்டியா கூறியிருந்தார்.

ஏனெனில் இந்த மைதானம் வழக்கமாக சுழலும் பந்தைவிட அதிகமாக 3.7 முதல் 3.8 டிகிரி வரை அதிகமாக சுழன்றது. இதன் காரணமாக பேட்ஸ்மன்களுக்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டார். அதோடு உலகின் நம்பர் 1 வீரரான சூரியகுமார் யாதவ் கூட இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சிரமப்பட்டார். இப்படி இந்த மைதானம் குறித்த சர்ச்சை எழுந்து வரவே லக்னோ மைதான ஆடுகளத்தை தயாரித்த ஊழியர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாண்டியாவின் இந்த மைதான தன்மை குறித்த கருத்திற்கு ரிப்ளை கொடுத்துள்ள இந்திய அணியின் துணைக்கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் சரி அதில் நாம் விளையாடி தான் ஆக வேண்டும். மேலும் ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை நம் கையில் இல்லை. எவ்வகையான ஆடுகளமாக இருந்தாலும் நாம் அதனை கையாண்டு விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியில் நாங்கள் இறுதிவரை விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. மைதானத்தின் தன்மை சவாலாக இருந்தால் அதையும் அந்த சவாலையும் சமாளித்து வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்று சூரியகுமார் யாதவ் பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : இந்திய அணியின் நிர்வாகம் வைத்த வேண்டுகோளால் வேலையிழந்த லக்னோ மைதான ஊழியர் – விவரம் இதோ

இந்த மைதானத்தில் நாங்கள் 100 ரன்கள் என்கிற எளிய இலக்கை விரட்டினாலும் இறுதிவரை விக்கெட்டை கொடுக்காமல் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று நினைத்து கடைசி வரை பாண்டியாவும் நானும் போராடியதாகவும், இறுதி ஓவரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் போட்டியை முடித்து விட வேண்டும் என்று நினைத்து போட்டியில் வெற்றி பெற்றோம் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement