இந்திய அணியின் நிர்வாகம் வைத்த வேண்டுகோளால் வேலையிழந்த லக்னோ மைதான ஊழியர் – விவரம் இதோ

Lucknow-Curator
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா அணியானது எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

ஆனால் மைதானத்தின் மோசமான தன்மை காரணமாக கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் தான் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அந்த லக்னோ மைதான ஊழியர் பதவி நீக்கப்பட்டுள்ளது தற்போது பெரிய அளவில் சர்ச்சையாக மாறி உள்ளது.

ஏனெனில் வழக்கமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இந்தியாவில் ஆடுகளங்கள் அமைக்கப்படும் வேளையில் இந்த மைதானம் மிகவும் மோசமாக சுழன்றதால் பிசிசிஐ இந்த மைதான ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் இந்த இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணி நிர்வாகம் தான் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

- Advertisement -

இதனால் லக்னோ மைதானத்தில் இருந்த கருப்பு மண்ணை நீக்கிய மைதான ஊழியர்கள் சிகப்பு நிற மண்ணை நிரப்பி ஆடுகளத்தை உருவாக்கினார்கள். இப்படி இந்திய நிர்வாகம் கேட்டுக் கொண்ட காரணத்தினால் பிட்சை மாற்றியதாலேயே மைதானத்தில் மோசமான தன்மை ஏற்பட்டதும் இதனால் அவருக்கு வேலை பறிபோகியும் உள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : யுஸ்வேந்திர சாஹலின் பந்துவீச்சில் பெரிய குறை இருக்கிறது. அவர் வேண்டாம் – முன்னாள் வீரர் கருத்து

இந்த போட்டியின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூட : இது சர்வதேச போட்டி நடைபெறுவதற்கு உகந்த மைதானம் இல்லை. போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் சரியாக பிட்சை தயாரித்திருக்க வேண்டும் என்றும் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement