என்னதான் பிரஷர் இருந்தாலும் நான் ஃப்ரீயா பேட்டிங் பண்ண இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

Suryakumar-Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அதற்கு அடுத்து தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.

IND vs NZ

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மழை காரணமாக இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி சமநிலையில் முடிவடைந்ததால் இந்த தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் இரண்டாவது டி20 போட்டியின் போது சதம் அடித்து 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோன்று நேற்றைய மூன்றாவது போட்டியிலும் 13 ரன்கள் குவித்து இருந்ததார். இந்த தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவிற்கு இந்த டி20 தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

Suryakumar-Yadav

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த தொடர் இதுவரை நடைபெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டி முழுவதுமாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். ஆனால் முஹமது சிராஜ் கூறியது போல கிரிக்கெட் போட்டிகளின் போது இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. எனவே இந்த போட்டி முடிவு கிடைக்காமல் போனது.

- Advertisement -

நான் எப்பொழுதுமே பிரஷரான சூழலில் பேட்டிங் செய்ய வந்தாலும் என்னுடைய பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாட வேண்டும் என்று நினைப்பேன். அதன் காரணமாகத்தான் என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. அதோடு மட்டுமின்றி நான் பயிற்சியில் எவ்வாறு தயாராகிறேனோ அதேபோன்றுதான் போட்டிகளிலும் எந்தவித சுமையும் இன்றி களத்திற்கு சென்ற உடனே என்னுடைய அதிரடியை துவங்கி விடுவேன்.

இதையும் படிங்க : இது எல்லாமே நான் வேர்ல்டுகப்புக்காக ரெடி பண்ணது. அதைத்தான் இந்த தொடர்ல யூஸ் பண்ணேன் – சிராஜ் பேட்டி

அப்படி என்னால் களத்திற்கு சென்றவுடன் அட்டாக் செய்து விளையாட ஆரம்பித்து விட்டால் அப்படியே என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் தான் நான் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறேன் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement