இது எல்லாமே நான் வேர்ல்டுகப்புக்காக ரெடி பண்ணது. அதைத்தான் இந்த தொடர்ல யூஸ் பண்ணேன் – சிராஜ் பேட்டி

Mohammad-Siraj-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று நேப்பியர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் டேவன் கான்வே மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிலிப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

IND vs NZ

- Advertisement -

அதன்பிறகு 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 9 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிக்க்காதன் காரணமாக இந்த போட்டி டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி “டை” ஆனது.

இதன் காரணமாக இந்திய அணி இந்து தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டியில் பந்துவீச்சின் போது அசத்தலாக செயல்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் முகமது சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Mohammad Siraj

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது சிராஜ் கூறுகையில் : இந்த விக்கெட் பேட்டிங்க்கு சாதகமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த விக்கெட் பந்துவீச்சுக்கு கை கொடுத்தது. ஏற்கனவே இதுபோன்ற வெளிநாட்டு மைதானங்களில் நான் என்னுடைய சரியான லென்த்தில் பந்துவீசி வருகிறேன். அதன் காரணமாக இந்த போட்டியிலும் என்னால் மிகச் சிறப்பாக பந்து வீச முடிந்தது.

- Advertisement -

அதோடு நான் டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் மிகச் சிறப்பாக தயாராகினேன். அதே திட்டத்துடன் தான் இந்த போட்டியில் எனது பந்து வீச்சனை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினேன். என்னுடைய திட்டங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. எனவே நான் மகிழ்ச்சியுடன் பந்து வீசியதால் எனக்கு இங்கு விக்கெட்டுகளும் கிடைத்தது.

இதையும் படிங்க : அவர் லெஜெண்ட், அவரோட இடத்துக்கு நான் எப்போதும் வரமாட்டேன் – எனக்கு 5வது இடமே போதும், தீபக் ஹூடா ஓப்பன்டாக்

ஆனால் இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளின் போது வானிலை நிலவரம் என்பது நம் கையில் இல்லை. நம்மால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த போட்டியில் முடிவு கிடைக்காமல் போனது வருத்தம் தான் இருப்பினும் இந்த தொடரை நாங்கள் கைப்பற்றியதில் மகிழ்ச்சி என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement