துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு எனது அப்பா அனுப்பிய செய்தி இதுதான் – சூரியகுமார் நெகிழ்ச்சி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்னும் சில தினங்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 2 வகையான இந்திய அணிகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்டது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முற்றிலும் இளம்வீரர்களே இடம்பெற்றுள்ளனர்

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவும், துணைக்கேப்டனாக சூரியகுமார் யாதவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக 30 வயதில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் குறுகிய நாட்களிலே உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணிக்காக அறிமுகம் ஆனதிலிருந்து மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் தான் துணைக்கேப்டனானது குறித்து தனது தந்தை அனுப்பிய குறுந்தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஒரு வருடமாக நான் சிறப்பாக விளையாடியதற்காக கிடைத்த வெகுமதியாக நான் இதனை பார்க்கிறேன். உண்மையில் இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவி எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. நான் துணைக்கேப்டனாக செய்லபட காத்திருக்கிறேன்.

- Advertisement -

மேலும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் எனது தந்தை : இலங்கை அணிக்கெதிரான தொடரில் நான் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டதையும், அணி வீரர்களின் பட்டியலையும் எனக்கு குறுந்தகவலாக அனுப்பினார். அதோடு ஒரு சிறிய அறிவுரையும் அவர் வழங்கினார். அதன்படி அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : ஏற்கனவே அடுத்த கேப்டனா இருந்த அவரை உள்ளே ராகுல் புகுந்ததால் மறந்துட்டோம் – இளம் வீரருக்கு அஜய் ஜடேஜா ஆதரவு

எந்த ஒரு சூழலிலும் நீ அழுத்தத்தை உனக்குள் எடுத்துக்கொள்ளாதே.. உன்னுடைய இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்து அது உனக்கு நிச்சயம் வெற்றியை பரிசாக தரும். என்று அவரது தந்தை அறிவுரை கூறியதாக சூரியகுமார் யாதவ் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement