ஏற்கனவே அடுத்த கேப்டனா இருந்த அவரை உள்ளே ராகுல் புகுந்ததால் மறந்துட்டோம் – இளம் வீரருக்கு அஜய் ஜடேஜா ஆதரவு

Ajay
- Advertisement -

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு அடுத்தபடியாக சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை செய்து வருகிறது.

குறிப்பாக ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை அடுத்த டி20 கேப்டனாக மறைமுகமாக அறிவித்துள்ள பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2023 உலக கோப்பைக்கு பின் அவரையே கேப்டனாக அறிவிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டதால் காரணத்தால் திடீரென்று இவ்வளவு சீக்கிரமாக அடுத்த கேப்டனாக மாறியுள்ளார்.

- Advertisement -

எல்லாரும் மறந்துட்டோம்:
அதற்கு பெரும்பாலானவர்கள் வரவேற்பு தெரிவித்தாலும் அடிக்கடி காயமடைபவராக இருக்கும் ஹர்திக் பாண்டியா இப்போதும் முதுகு வலியால் தவிக்கும் காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து விட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுகிறார். அதனால் பும்ரா போல உலக கோப்பைக்கு முன் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினால் என்ன செய்வது என்ற கவலை நிறைய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (1609) குவித்த இந்திய வீரராக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப் திறமையை கொண்டிருப்பதால் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்டதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். குறிப்பாக 2020 சீசனில் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் டெல்லியை வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு அழைத்துச்சென்ற போது அனைவரும் அடுத்த கேப்டன் என்று பாராட்டினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக 2021 சீசனில் காயமடைந்து வெளியேறிய அவர் அதன் பின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறியதால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் அவருடைய கேப்டன்ஷிப் திறமையை மறந்து அணியிலிருந்து நீக்குமாறு விமர்சிக்க தொடங்கினார்கள்.

- Advertisement -

அந்த சமயத்தில் சற்று சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல் துணை கேப்டனாகவும் அடுத்த கேப்டனாகவும் பிசிசிஐயிடம் அங்கீகாரம் பெற்றார். ஆனால் தற்போது அவர் தடவலாக செயல்பட்டு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் ஷார்ட் பிட்ச் பலவீனத்தையும் தாண்டி இந்த வருடம் அதிக ரன்களை குவித்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரிடம் இயற்கையாகவே இருக்கும் கேப்டன்ஷிப் பண்புகளை இந்திய அணி நிர்வாகம் பார்க்க வேண்டும் என்று அஜய் ஜடேஜா கூறியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இப்போது மட்டுமல்ல கடந்த காலங்களில் 2 – 3 முறை ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறினார். தற்போது அதற்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுவதற்காக அவர் உழைத்து வருகிறார். எனவே ஒருவர தடையை கடக்க கற்றுக் கொண்டால் மற்றவர்களை நாம் பின்னால் வைக்கலாம். ஏனெனில் 2 – 3 வருடங்களுக்கு முன்பாக அவர் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போதைய இந்திய அணியில் 12 வீரர்களும் கேப்டன்களாக உள்ளனர். ஆனால் அவர் அப்போதே அடுத்த கேப்டனாக வருவார் என்று கூறப்பட்டது”

இதையும் படிங்கதொடர்ந்து சான்ஸ் கொடுக்க இது ஒன்னும் லக்னோ டீம் இல்ல – தடுமாறும் ராகுலை ஸ்ட்ரிக்ட்டாக கம்பீர் விமர்சித்தது என்ன

“அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்து இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 – 70 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். மேலும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் பற்றி நீங்கள் பார்க்கும் போது அஷ்வின் நிறைய பந்துகளை எதிர்கொண்டு நிறைய ரன்கள் எடுத்திருந்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் தாம் தான் கடைசி பேட்ஸ்மேன் என்பதை உணர்ந்து பொறுமையாக பொறுப்புடன் பேட்டிங் செய்தார். அவருடைய அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று பாராட்டினார்.

Advertisement