தொடர்ந்து சான்ஸ் கொடுக்க இது ஒன்னும் லக்னோ டீம் இல்ல – தடுமாறும் ராகுலை ஸ்ட்ரிக்ட்டாக கம்பீர் விமர்சித்தது என்ன

Gambhir KL Rahul
- Advertisement -

வங்கதேச சுற்றுப்பயணத்திற்குப் பின் நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 2023 புத்தாண்டில் நடைபெறும் இத்தொடர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக செயல்பட உள்ளனர். அந்த அணிகளில் ரசிகர்கள் மகிழ்ந்த விஷயம் என்னவெனில் டி20 அணியில் முற்றிலும் கழற்றி விடப்பட்ட கேஎல் ராகுல் ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பராக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது இதுவரை 3 வகையான கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் அந்தப் பதவிகளை மொத்தமாக இழந்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய சொதப்பலான செயல்பாடுகள் தான் என்பது அவருக்கே தெரியும். ஏனெனில் 2019 வாக்கில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இளம் வீரராக இருந்ததால் அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்த பிசிசிஐ துணை கேப்டனாக அறிவித்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் 17 கோடி என்ற உச்ச கட்டத்தை எட்டிய தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக சமீப காலங்களில் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யும் அவர் தமது அணி தோல்வியடையும் வகையில் செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

லக்னோ டீம் இல்லை:
அந்த செயல்பாடுகளும் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்தால் குறைந்து சுமாராக செயல்பட்ட அவர் கடந்த 6 மாதங்களாக இழந்த ஃபார்மை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கிறார். அத்துடன் பொதுவாகவே கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அசத்தக்கூடிய அவர் சமீப காலங்களில் அதிலும் சொதப்பலாகவே செயல்பட்டார். இருப்பினும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக வாய்ப்பு பெற்ற வந்த அவர் தற்போது அதையும் இழந்துள்ளதால் இலங்கை ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் தவிர்க்க முடியாதவர்கள் என்று யாருமில்லை என தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இலங்கை ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படாமல் போகும் பட்சத்தில் தேர்வுக்குழுவினர் ராகுலை நீக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். எனவே தாம் ஆலோசகராக இருக்கும் லக்னோ ஐபிஎல் அணி போல இந்திய தேர்வுக்குழுவை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவிக்கும் அவர் சிறப்பாக செயல்படுமாறு ராகுலை அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். நீங்கள் தேர்வு குழுவினரை கட்டுப்படுத்த முடியாது. அதே போல் அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது”

- Advertisement -

“தற்போதைக்கு உங்களது கையில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் உள்ளது. அதில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே உங்களால் கட்டுப்படுத்த முடியும். எனவே உங்களால் உங்களால் கட்டுப்படுத்த முடியாதவற்றை கட்டுப்படுத்த நினைக்கும் போது உங்களை நீங்களே அழுத்தத்திற்குள் தள்ளுவது போன்ற நிலைமை ஏற்படும். குறிப்பாக இந்திய அணியில் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லையெனில் உங்களது இடத்தை வேறு யாராவது எடுத்துக் கொள்வார்கள்”

“அது சஞ்சு சாம்சன் அல்லது ராகுலுக்கு மட்டுமல்ல விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கும் பொருந்தும். இந்திய அணியில் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் நிச்சயமாக உங்களது இடத்திற்கு கேள்விகள் வரத்தான் செய்யும். அது தானே சர்வதேச கிரிக்கெட். இங்கே யாரும் தவிர்க்க முடியாதவர்கள் என்று கிடையாது”

இதையும் படிங்கஇந்திய அணியில் நிகழும் கேப்டன்ஷிப் மாற்றங்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் – ரமீஸ் ராஜாவின் புதிய உருட்டல் என்ன

“எனவே உங்களது கையில் உள்ள இந்த 3 ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்களை குவியுங்கள். அது தான் உங்களை தொடர்ந்து இந்திய அணியில் நிலைத்திருக்க வைக்கும். உங்களது பெயரோ அல்லது திறமையோ இந்திய அணியில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்காது” என்று மிகவும் கரராக பேசினார்.

Advertisement