இந்திய அணியில் நிகழும் கேப்டன்ஷிப் மாற்றங்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் – ரமீஸ் ராஜாவின் புதிய உருட்டல் என்ன

Ramiz Raja IND vs Pak
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அதற்கு முன்பாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கான வேலைகளை துவங்கியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட துவங்கியுள்ள பிசிசிஐ முதலில் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ளது.

அதற்காக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கியுள்ள பிசிசிஐ 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப் பதிவிலிருந்து ஓரம் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் பரம எதிரியான பாகிஸ்தானை முதல் போட்டியிலேயே காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு தோற்கடித்தது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -

காரணமே பாகிஸ்தான்:
குறிப்பாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் தன்னுடைய தலைமையில் இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையில் தோற்கடித்து அவமானத்தை பரிசளித்த பாகிஸ்தானை இம்முறை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற வைத்த விராட் கோலி பழிக்கு பழி தீர்த்துக் கொண்டார். முன்னதாக உலகக் கோப்பையை வென்று கொடுக்காத காரணத்தால் விமர்சனங்களை சந்தித்திருந்த விராட் கோலி 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

ஆனால் அவரது தலைமையில் டி20 உலக கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்ததால் மேலும் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஒருநாள் கேப்டன்சிப் பதவியை பறித்தது. இந்நிலையில் 2021 டி20 உலக கோப்பையிலும் 2022 ஆசிய கோப்பையிலும் தங்களிடம் சந்தித்த தோல்விகளை ஜீரணிக்க முடியாத காரணத்தாலேயே தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கி கேப்டன்களையும் பிசிசிஐ மாற்றியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் மற்றும் தலைவர் ரமீஷ் ராஜா கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களது தலைமையில் பாகிஸ்தான் அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. குறிப்பாக நாங்கள் ஆசிய கோப்பை பைனலில் விளையாடினோம். ஆனால் இந்தியா அதில் விளையாடவில்லை. அந்த வகையில் பில்லியன் டாலர் கிரிக்கெட் தொழிற்சாலையான இந்தியா எங்களை விட பின்தங்கியது. அதனாலேயே அவர்கள் (இந்தியா) தேர்வுக்குழு தலைவரையும், தேர்வுக்குழுவினரையும் அடியோடு நீக்கி விட்டு கேப்டன்களையும் மாற்றினார்கள். ஏனெனில் தங்களை விட பாகிஸ்தான் முன்னே சென்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை” என்று கூறினார்.

இருப்பினும் வரலாற்றில் 30 வருடங்களாக தொடர்ந்து உலக கோப்பையில் வெற்றி பெற்ற இந்தியா 1 தோல்வியை சந்தித்தாலும் பெருமை கொள்ளும் அணியாகவே உள்ளது. எனவே உண்மையில் சுமாராக செயல்படும் சீனியர் வீரர்களை கழற்றி விட்டு புதிய அணியை உருவாக்குவதற்காகவே இந்த அதிரடி மாற்றங்களை பிசிசிஐ செய்து வருகிறது. ஆனால் தங்களிடம் தோற்றதால் தான் இந்தியா அந்த மாற்றங்களை செய்வதாக இவர் கூறுவதை இந்திய ரசிகர்கள் உருட்டலாகவே பார்க்கிறார்கள். அத்துடன் தமது தலைமையில் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டும் தமது தலைமையிலான பாகிஸ்தான் வாரியத்தை கூண்டோடு கலைத்தது பற்றி ரமீஸ் ராஜா காட்டத்துடன் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்கஅவர் விராட் கோலி மாதிரி வர வேண்டியவர், வாழ்த்து சொல்லியே வங்கதேச கதையை முடித்த அஷ்வின் – பகிர்ந்த ஸ்வாரஸ்ய பின்னணி

“எங்களை நீக்கியது பிபா உலக கோப்பை பைனலில் தோற்ற பிரான்ஸ் அணி நிர்வாகத்தையும் வாரியத்தையும் கூண்டோடு நீக்கியது போன்றதாகும். ஏனெனில் நான் எங்களது அணி இணைந்து செயல்படுவதற்கு என்னால் முடிந்தவற்றை செய்தேன். நான் பாபர் அசாமுக்கு அதிகாரத்தை கொடுத்தேன். உலகிலேயே கிரிக்கெட்டில் மட்டும் தான் கேப்டன்ஷிப் என்பது மிகவும் இன்றியமையாததாகும். அங்கே உங்களது கேப்டன் பவராக இருந்தால் முடிவுகளும் வெற்றிகளும் பவராக வந்து சேரும்” என்று கூறினார்.

Advertisement