அவர் விராட் கோலி மாதிரி வர வேண்டியவர், வாழ்த்து சொல்லியே வங்கதேச கதையை முடித்த அஷ்வின் – பகிர்ந்த ஸ்வாரஸ்ய பின்னணி

Ashwin
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற அத்தொடரின் கடைசி போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 74/7 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது 8வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29* ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 42* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர்.

அப்போட்டியில் பினிஷிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அப்போட்டியில் 3வது நாள் மாலையில் லிட்டன் தாஸ், மெஹதி ஹசன் ஆகியோர் இன்றே பேட்டிங் செய்ய வருவீர்கள் என்று எதிர்பார்த்ததாகவும் 4வது நாளில் உங்களது விக்கெட் மிகவும் முக்கியம் என்று நீச்சல் குளப் பகுதியில் மரியாதையான முறையில் ஸ்லெட்ஜிங் செய்ததாக அஷ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

வாழ்த்து சொல்லியே:
அப்போது வங்கதேசம் வெற்றி பெறும் நிலையில் இருந்ததால் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி பதிலடி கொடுத்து விட்டு அடுத்த நாள் பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததாக மகிழ்ச்சியுடன் கூறும் அவர் இது பற்றி பேசியது தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் (மெஹதி ஹசன், லிட்டன் தாஸ்) நீச்சல் குளத்தில் இருந்தார்கள். அப்போது அங்கே சென்ற என்னை அவர்கள் பெங்காலி வார்த்தைகளை பயன்படுத்தி கடுப்பேற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த இருவரும் சமூகமாக நடந்து கொண்டார்கள்”

“அவர்கள் என்னிடம் “வெல்கம் ஆஷ் பாய். நீங்கள் இன்று நைட் வாட்ச்மேட்னாக வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஏன் நீங்கள் வரவில்லை? ஆனால் எப்படி இருந்தாலும் நாளை வரப்போகும் உங்களது விக்கெட் எங்களுடைய வெற்றிக்கு மிகவும் முக்கியமாகும்” என்று கூறி லேசான ஸ்லெட்ஜிங்கை ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களுக்கு நான் “வங்கதேசத்தின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துக்கள் கய்ஸ்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் “அடப்போங்க ஆஷ். நீங்கள் மிகவும் ஆழமாக பேட்டிங் செய்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்பதால் வெற்றி எங்களுக்கு சுலபமாக இருக்காது. அதே சமயம் மிர்பூரில் 4வது இன்னிங்ஸில் எந்த இலக்கையும் சேசிங் செய்வது சுலபமான காரியமல்ல” என்று கூறினார்கள்”

- Advertisement -

“அப்போது மெஹதியிடம் நான் “ப்ரோ 35 ஓவர்கள் வரை பொறுமையாக இருங்கள். ஒருமுறை பந்தின் தன்மை மாறினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறினேன். குறிப்பாக 35 ஓவர்களுக்குப் பின் பிட்ச் மற்றும் பிட்ச்சின் தன்னை மாறும் என்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர்களிடம் கூறினேன்” என தெரிவித்தார். அத்துடன் வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் லிட்டன் தாஸ் விராட் கோலி போல் வரும் திறமை இருந்தும் இன்னும் மேலே வராமல் இருப்பது தமக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அவரிடமே தெரிவித்ததாக அஷ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “லிட்டன் டாஸ் அறிமுக போட்டியில் விளையாடிய திறமையும் ஸ்டைலையும் பார்த்த எனக்கு வங்கதேச கிரிக்கெட்டின் தடையை உடைப்பவராக இவர் இருப்பார் என்று தோன்றியது. அதை இப்போட்டியின் போது “நீங்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் போல வருவீர்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் இப்படியே இருப்பது எனக்கு ஏமாற்றமளிப்பதாக” லிட்டன் தாஸிடம் நேரடியாக கூறினேன்”

இதையும் படிங்கவீடியோ : உலகிலேயே ரூல்ஸ் தெரியாம விளையாடும் ஒரே டீம் – பாகிஸ்தானின் கோமாளித்தனத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

“அதற்கு “ஒப்புக்கொள்கிறேன் ஆஷ் பாய். ஆனால் எங்களுடைய கிரிக்கெட் கலாச்சாரம் வேறுபட்டது. குறிப்பாக நாங்கள் இங்கே விளையாடுவதால் எங்களுக்கு வெளியே சென்று விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் வித்தியாசமான மைதானங்களில் விளையாடும் போது எங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறினார். மேலும் அங்கிருந்து நான் நகரும் போது வெற்றிகரமாக செயல்படுவதற்கான ஃபார்முலாவை கண்டறிந்ததை பற்றி அவர் என்னிடம் தெரிவித்தார். அப்போது நீங்கள் வெற்றிகரமாக செயல்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் மனிதர் நானாக இருப்பேன் என்று அவரிடம் பதிலளித்து அங்கிருந்து கிளம்பினேன்” என்று அஸ்வின் கூறினார்.

Advertisement