என்னுடைய வித விதமான ஷாட்களுக்கு காரணமே இதுதான். சீக்ரெட்டை உடைத்த – ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவ்

Suryakumar-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நேற்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி குரூப் இரண்டில் முதலிடம் பிடித்து தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.

Ind vs ZIm Suryakumar Yadav Sikander Raza

- Advertisement -

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்து 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் குவிக்க முக்கிய காரணமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தான் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் 15 ஓவர்கள் வரை சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த இந்திய அணியானது கடைசி ஐந்து ஓவர்களில் 79 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிலும் தனிப்பட்ட வகையில் மிகவும் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் இந்த போட்டியில் வெறும் 25 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய ஆட்டநாயகன் சூர்யா குமார் யாதவ் கூறுகையில் :

Suryakumar Yadav 1

நாங்கள் பேட்டிங் செய்யும்போது எங்களது திட்டம் தெளிவாக இருந்தது. அதிலும் குறிப்பாக நானும் ஹார்டிக் பாண்டியாவும் பேட்டிங் செய்ய இணைந்த போது கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். அதன்படி பந்துகளை அடிக்க தொடங்கிய நாங்கள் அதை இறுதிவரை நிறுத்தவே இல்லை. இந்திய அணியில் தற்போது உள்ள சூழல் மிகவும் அருமையாக இருக்கிறது. அதன் காரணமாகவே போட்டிகளை நான் அனுபவித்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்.

- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை பொருத்தவரை என்னுடைய திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அதாவது கடைசி கட்டத்தில் பந்துகளை விதவிதமாக அடிக்க நினைத்தேன். இப்படி நான் வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடுவதற்கு காரணம் யாதெனில் : வலை பயிற்சியின்போது நான் இதுபோன்ற வித்தியாசமான ரன் குவிக்கும் ஷாட்களைதான் பயிற்சி செய்வேன். அப்படி வலை பயிற்சியில் எதனை நான் தொடர்ச்சியாக பயிற்சி செய்து விளையாடுகிறேனோ அதையே தான் போட்டியின் போதும் உபயோகப்படுத்துகிறேன்.

இதையும் படிங்க : அவருக்கே நம்பிக்கை இல்ல, விக்கெட்களை எடுத்தும் அஷ்வினை அணியிலிருந்து நீக்க கோரும் கபில் தேவ் – காரணம் என்ன

அது மட்டுமின்றி அணியின் சூழ்நிலை மற்றும் அணிக்கு என்ன தேவை என்று எதிர்பார்க்கும் போது இதுபோன்ற ஆட்டத்தினால் கிடைக்கும் ரன்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. அதன் காரணமாகவே நான் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறேன். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியையும் ஒரு புது போட்டியாக நினைத்து புதிதாக விளையாடுவது போல் மகிழ்ந்து விளையாடுகிறேன். அடுத்து அரையிறுதி போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement