அவருக்கே நம்பிக்கை இல்ல, விக்கெட்களை எடுத்தும் அஷ்வினை அணியிலிருந்து நீக்க கோரும் கபில் தேவ் – காரணம் என்ன

Kapil Dev Ravichandran Ashwin
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் யாருமே எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று முடிந்துள்ள முதல் மற்றும் சூப்பர் 12 சுற்றில் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா நவம்பர் 10ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதியில் பலப்பரிட்சை நடத்த களமிறங்குகிறது.

அதிலும் 2014 முதல் இது போல் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றும் முக்கிய நேரங்களில் சொதப்பி வெளியேறிய கதையை இம்முறையும் செய்யாமல் சிறப்பாக செயல்பட இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர். முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆரம்பம் முதலே விளையாடி வருகிறார். பொதுவாகவே ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரும்பாலும் வேகத்துக்கு அதிகமாகவும் சுழல் பந்து வீச்சுக்கு குறைவாகவும் சாதகமாக இருக்கும் என்பதால் முழுமையான சுழல் பந்து வீச்சாளராக மட்டும் இருக்கும் சஹாலுக்கு பதிலாக பேட்டிங்கில் கணிசமான ரன்களை சேர்க்கும் திறமை பெற்றுள்ளதால் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

தன்னம்பிக்கை இல்ல:
அந்த வகையில் முதல் 4 போட்டிகளில் குறைவான விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை வாரி வழங்காமல் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டிங்கில் அதையும் மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த சொதப்பிய செய்யாமல் கடைசி பந்தில் லாவகமாக தூக்கி அடித்து வரலாற்று வெற்றியை உறுதி செய்த அவர் வங்கதேசத்துக்கு எதிராக வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போட்டியிலும் முக்கியமான 13* (6) ரன்களை குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

இருப்பினும் பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்ற விமர்சனத்தை வைத்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சஹாலுக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்தும் அதில் தன்னம்பிக்கை இல்லாதது போல் அஷ்வின் செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் “அப்போட்டில் நானா விக்கெட்டை எடுத்தேன்” என்ற வகையில் தன்னம்பிக்கை இன்றி அவர் முகத்தை மூடிக்கொண்டதாக கூறும் அவர் செமி பைனலில் சஹால் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போது வரை அஷ்வின் என்னிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இன்று விக்கெட்டுகளை எடுத்தாலும் அதை அவர் எடுத்ததாக தோன்றவில்லை. சொல்லப்போனால் பேட்ஸ்மேன்கள் வழியே சென்று அவுட்டாகி 1 – 2 விக்கெட்டுகளை அவருக்கு கொடுத்தனர். அதனாலேயே ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டார். இது போன்ற விக்கெட்டுகளை எடுப்பது தன்னம்பிக்கையை கொடுக்கும் என்றாலும் அவர் நமக்குத் தெரிந்த அஷ்வினாக இந்த தொடரில் பழைய பார்மில் செயல்படவில்லை”

“எனவே அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது அணி நிர்வாகத்தின் முடிவாகும். ஒருவேளை அவர் மீது அவர்கள் நம்பிக்கை வைத்தால் நல்லது. ஏனெனில் இந்த தொடரில் முழுமையாக விளையாடியுள்ள அவர் அடுத்து வரும் போட்டிகளில் தன்னைத்தானே மெருகேற்ற முடியும். ஆனால் எதிரணிக்கு நீங்கள் ஆச்சரியத்தை கொடுக்க விரும்பினால் மணிக்கட்டு ஸ்பின்னருக்கு (சஹால்) வாய்ப்பு கொடுங்கள். அந்த வகையில் அடுத்த போட்டியில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் தன்னம்பிக்கையை பெறுபவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட சமீபத்திய தொடர்களில் சுமாராக செயல்பட்டதால் கடைசியாக நடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சஹால் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட சஹாலுக்கு பேட்டை பிடிக்கக் கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement