- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக 20 வருஷத்தில் யாரும் செய்யாத சாதனையை செஞ்ச.. ரோஹித்தை விமர்சிக்காதிங்க.. சூரியகுமார் ஆதரவு

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வலுவான நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது. முன்னதாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ரோகித் சர்மா தலைமையில் தகுதிப் பெற்ற இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனலுக்கும் தகுதி பெற்று அசத்தியது.

அப்படியே 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கும் அவரது தலைமையில் இந்தியா தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் கடைசியாக நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களிலும் இந்தியா ஃபைனல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

சிறந்த கேப்டன்:

டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி தொடர்களின் ஃபைனலுக்கு தனது அணியை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அப்படிப்பட்ட ரோஹித் சர்மா உடல் பருமனுடன் ஃபிட்டாக இல்லாததால் இந்திய அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் சாமா முகமது சமீபத்தில் விமர்சித்தார்.

அதற்கு சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் கடந்த 20 வருடங்களில் வேறு எந்த கேப்டனும் இந்தியாவை தொடர்ந்து 4 ஐசிசி தொடர்களின் ஃபைனலுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவரை விமர்சிப்பது நியாயமற்றது என்றும் சூரியகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் ஆதரவு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக ரோகித் நம்மை 4 ஐசிசி தொடர்களின் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நம்முடைய நாட்டுக்கு இது மிகவும் பெரிய விஷயம். 15 – 20 வருடங்களில் இது போன்ற வழியில் ஒருவர் விளையாடினால் அது மிகவும் பெரியது. அவரை நான் நெருக்கமாக கவனித்து வருகிறேன். சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் ரோகித் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: தேவையின்றி வாயை விட்டு வம்பிழுத்த ஹர்மன்ப்ரீத்.. அபராதம் போட்ட பிசிசிஐ

“எனவே சிறந்த வீரர்களின் பட்டியலில் மேலே இருக்கும் ரோகித் சர்மாவுக்கு ஃபைனல் போட்டிக்காக நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா நன்றாக விளையாடுகிறது. ஃபைனல் என்பது நமக்கு மற்றுமொரு போட்டி. அதில் 1 முதல் 15 வரை நமது அணியில் உள்ள அனைவரும் நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -