இது தான் வாழ்க்கையோட தத்துவம்.. ஒருநாள் முன்னாதாவே பேசி வெச்சு அடிச்சோம்.. சூர்யகுமார் யாதவ் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சூரியகுமார் யாதவ் 78, ரோகித் சர்மா 36, திலக் வர்மா 34* ரன்கள் எடுத்த உதவியுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு ஷாம் கரண் 6, ரிலீ ரோசவ் 1, லியாம் லிவிங்ஸ்டன் 1, ஜிதேஷ் சர்மா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார். அதனால் கடைசியில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் பஞ்சாப் 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

சூர்யகுமாரின் தத்துவம்:
இந்த வெற்றிக்கு 5.2 எகனாமியில் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல இப்போட்டியில் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 78 (53) ரன்கள் அடித்து கருப்பு குதிரையாக செயல்பட்டார். காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாடாத அவர் பெங்களூருவுக்கு எதிராக 17 பந்தில் 50 ரன்கள் விளாசி மிரட்டல் கம்பேக் கொடுத்தார்.

ஆனால் சென்னைக்கு எதிரான அதற்கடுத்த போட்டியில் டக் அவுட்டான அவர் மீண்டும் இப்போட்டியில் 78 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த போட்டியில் டக் அவுட்டான தாம் இப்போட்டியில் 78 ரன்கள் அடித்தது வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் பற்றிய தத்துவத்தை உணர்த்துவதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை காண்பிக்கிறது. இன்றைய போட்டியில் நான் ஃபீல்டிங் செய்வதற்கு மெதுவாக துவங்கினேன். அதனால் என்னால் முழுமையான போட்டியில் விளையாட முடிந்தது. இந்த போட்டியில் யாராவது ஒருவர் 17 அல்லது 18 வது ஓவர் வரை நிலையாக விளையாட வேண்டும் என்று ஒரு நாள் முன்பாகவே நாங்கள் விவாதித்தோம்”

இதையும் படிங்க: 5.2 எக்கனாமியில் பஞ்சாப்பை சாய்த்த பும்ரா.. மும்பையின் துருவ நட்சத்திரமாக ஆல் டைம் ஐபிஎல் சாதனை

“அதனால் வழக்கத்திற்கு மாறாக இன்று என்னுடைய பேட்டிங்கை சற்று நான் மெதுவாக துவங்கினேன். கடந்த சில தினங்களாக பனி இல்லை” என்று கூறினார். இந்த வெற்றியால் 7 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை நிம்மதியடைந்துள்ளது. அதனால் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருந்த அந்த அணி தற்போது 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

Advertisement