5.2 எக்கனாமியில் பஞ்சாப்பை சாய்த்த பும்ரா.. மும்பையின் துருவ நட்சத்திரமாக ஆல் டைம் ஐபிஎல் சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 36, சூரியகுமார் யாதவ் 78 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷாம் கரண் 6, ரிலீ ரோசவ் 1, லியாம் லிவிங்ஸ்டன் 1, ஜிதேஷ் சர்மா 9 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். அதனால் கடைசி நேரத்தில் சசாங் சிங் 41, அசுடோஸ் சர்மா 61 (28) ரன்கள் எடுத்துப் போராடியும் 19.1 ஓவரில் 183 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் போராடி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

துருவ நட்சத்திரம்:
மும்பை அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்சி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 4 ஓவரில் வெறும் 21 ரன்களை 5.20 என்ற துல்லியமான எகனாமியில் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்பாக ரிலீ ரோசவ்வை துல்லியமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கிய அவர் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்டது ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அத்துடன் இதே போட்டியில் மற்ற பவுலர்கள் அனைவரும் 8க்கும் மேற்பட்ட எக்கனாமியில் தடுமாற்றமாக பந்து வீசினார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் துருவ நட்சத்திரம் போல் செயல்பட்ட பும்ரா 5.2 எக்கனாமியில் துல்லியமாக பந்து வீசி தம்முடைய தரத்தை நிரூபித்தார்.

- Advertisement -

அதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ஊதா தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார். அந்தளவுக்கு அசத்தும் அவர் இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வேகப்பந்து வீச்சாளர் என்ற உமேஷ் யாதவ் சாதனையை (தலா 10) பும்ரா சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: இதனால் தான் எனக்கு டி20 போட்டிகள் பிடிக்கிறத்தில்ல.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

அத்துடன் மும்பை அணிக்காக 10 ஆட்டநாயகன் விருதுகள் வென்ற முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற ஆல் டைம் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் லசித் மலிங்கா 6 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே முந்தைய சாதனையாகும். மேலும் ரோகித் சர்மா (16), பொல்லார்ட் (14) ஆகியோருக்கு பின் மும்பை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற 3வது வீரராகவும் பும்ரா ஜொலித்து வருகிறார்.

Advertisement