இதனால் தான் எனக்கு டி20 போட்டிகள் பிடிக்கிறத்தில்ல.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

Jasprit Bumrah 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 192 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 78, ரோகித் சர்மா 36 ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 193 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷாம் கரண் 16, ரிலீ ரோசவ் 1, லியாம் லிவிங்ஸ்டன் 1, ஜிதேஷ் சர்மா 9 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே மும்பையின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பும்ரா அதிருப்தி:
அதனால் 14/4 என சரிந்து தடுமாறிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது லோயர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய சசாங் சிங் 41 (25) ரன்கள் விளாசி போராடி அவுட்டானார். அதே போல எதிர்ப்புறம் கடைசி நேரத்தில் மும்பையை அடித்து நொறுக்கிய இளம் வீரர் அசுடோஸ் சர்மா 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 61 (28) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

இருப்பினும் 19.1 ஓவரில் பஞ்சாப்பை 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றி பெற்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜெரால்ட் கோட்சி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு வழக்கம் போல 4 ஓவரில் வெறும் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 2 ஓவருக்கு மேல் பந்து ஸ்விங் ஆவதில்லை என்று தெரிவிக்கும் பும்ரா இம்பேக்ட் வீரர் விதிமுறை பவுலர்களுக்கு கடினத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதனாலயே டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தமக்கு பிடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் நினைத்ததை விட இந்த போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. பந்து ஏதேனும் செய்யும் போது நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவீர்கள். டி20 கிரிக்கெட்டில் பந்து 2 ஓவர்கள் ஸ்விங் ஆகும். எனவே நான் அதிகமாக பந்து வீச விரும்பும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன். அதுவே என்னுடைய ஆசையை திருப்தி செய்யும்”

இதையும் படிங்க: 14/4 என சரிந்த பஞ்சாப்.. 7 சிக்ஸருடன் மும்பையை அலறவிட்ட 25 வயது வீரர்.. கடைசியில் நிகழ்ந்த ட்விஸ்ட்

“நேரம் குறைவு, இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்றவையால் டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாக மாறியுள்ளது. பேட்டிங் வரிசையும் ஆழமாகியுள்ளது. ஆனால் அது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் பவுலர்களுக்கு சில மெசேஜ்களை கொடுக்கிறேன். இருப்பினும் அனல் பறக்கும் தருணத்தில் நீங்கள் அதிகமான மெசேஜ்களை கொடுக்க விரும்ப மாட்டீர்கள்” என்று கூறினார்.

Advertisement