14/4 என சரிந்த பஞ்சாப்.. 7 சிக்ஸருடன் மும்பையை அலறவிட்ட 25 வயது வீரர்.. கடைசியில் நிகழ்ந்த ட்விஸ்ட்

Asutosh sharma
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 33வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய மும்பைக்கு இசான் கிசான் ஆரம்பத்திலேயே ரபாடா வேகத்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரை சதமடித்து 7 பவுண்டரி 3 சிக்சருடன் 78 (53) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

போராடி வெற்றி:
அதைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 10, டிம் டேவிட் 14 ரன்களில் அவுட்டானாலும் திலக் வர்மா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 34* (18) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் மும்பை 192/7 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3, கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 193 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ஜெரால்ட் கோட்சி வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் கோல்டன் டக் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த ரிலீ ரோசவை 1 ரன்களில் போல்டாக்கிய பும்ரா மறுபுறம் தடுமாறிய கேப்டன் சாம் கரணையும் 6 ரன்களில் துல்லியமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கினார். அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 14/4 என ஆரம்பத்திலேயே பஞ்சாப் திணறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஹர்ப்ரீத் பாட்டியா 13, ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் 77/6 என மேலும் திணறிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது சசாங் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்து பஞ்சாப் வெற்றிக்காக போராடினர். ஆனால் அதில் பவுண்டரி 3 சிக்சருடன் அசத்தலாக விளையாடிய சசாங் சிங்கை 41 (25) ரன்களில் பும்ரா காலி செய்தார். இருப்பினும் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய அசுடோஸ் சர்மா மும்பையை கடைசி நேரத்தில் அட்டகாசமாக எதிர்கொண்டு 23 பந்துகளில் அரை சதமடித்து மும்பைக்கு பயத்தை காட்டி வெற்றிக்கு போராடினார்.

இதையும் படிங்க: லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள தல தோனி – நடந்தா நல்லா இருக்கும்

ஆனால் 2 பவுண்டரி 7 சிக்சரை பறக்கவிட்டு 61 (28) ரன்கள் குவித்த அவர் 19வது ஓவரில் அவுட்டானதால் பஞ்சாப் பற்றி கேள்விக்குறியானது. ஏனெனில் அப்போது வந்த ரபாடா சிக்ஸர் அடித்த போதிலும் கடைசி ஓவரில் 8 ரன்னில் ரன் அவுட்டானார். அதனால் 19.1 ஓவரில் 183 ரன்களுக்கு பஞ்சாப்பை ஆல் அவுட்டாக்கிய மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி 3வது வெற்றிடை பதிவு செய்தது. அதனால் கடைசி ஓவர் வரை போராடி பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. மும்பைக்கு அதிகபட்சமாக பும்ரா மற்றும் ஜெரால்டு கோட்ச்சி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement