லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ள தல தோனி – நடந்தா நல்லா இருக்கும்

MS-Dhoni
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 6 போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் 34-வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாட இருக்கின்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணி காத்திருக்கின்றது. இந்நிலையில் சென்னை அணியில் உள்ள பேட்டிங் ஆர்டரில் சில சிக்கல்கள் இருப்பதால் தோனி ஒரு முக்கிய முடிவை எடுக்க காத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போதைய சென்னை அணியின் மிடில் ஆர்டரில் ஷிவம் துபே மட்டுமே அதிரடியாக விளையாடி வரும் வேளையில் மற்ற வீரர்கள் சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் மிடில் இவர்களில் சி.எஸ்.கே அணியானது ரன் குவிக்க சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக லக்னோ அணிக்கெதிரான போட்டியில் தோனி முன்கூட்டியே களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்று முடிந்த போட்டியில் கடைசி ஓவரின் போது களமிறங்கிய தோனி ஹாட்ரிக் சிக்சருடன் நான்கு பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்து அசத்தினார்.

- Advertisement -

இவ்வேளையில் அவரது இந்த சிறப்பான பார்ம் காரணமாக அவர் டாப் ஆர்டரில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லக்னோ ஆடுகளம் பேட்டிங்கிற்கு செய்வதற்கு சற்று தொய்வாக இருக்கும் என்பதனாலும் இந்த மாற்றம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அரைசதம் அடித்ததும் சூரியகுமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. கைதட்டி வரவேற்ற ஹார்டிக் பாண்டியா – நடந்தது என்ன?

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று நல்ல உடல் தகுதியுடனும் நல்ல ஹிட்டிங் ஃபார்முடனும் இருக்கும் தோனி டாப் ஆர்டரில் களமிறங்கினால் அது சென்னை அணிக்கு பலத்தை சேர்க்கும் என்பதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தோனி ஐந்தாவது வீரராக களத்திற்கு வந்தால் நிறைய பந்துகளை எதிர்கொள்வார் என்பதால் ரசிகர்களும் தோனி இந்த முடிவினை எடுக்க வேண்டும் என பிராத்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement