அரைசதம் அடித்ததும் சூரியகுமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. கைதட்டி வரவேற்ற ஹார்டிக் பாண்டியா – நடந்தது என்ன?

SKY-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது இன்று சண்டிகர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 78 ரன்களையும், ரோகித் சர்மா 25 பந்துகளில் 36 ரன்களையும் குவித்து அசத்தினர். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும், சாம் கரண் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதனை தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 78 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சரியாக 34 பந்துகளில் அரைசதம் கடந்த சூரியகுமார் யாதவ் அதனை கொண்டாடிய விதம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த பிறகு பவுண்டரி லைன் அருகில் அமர்ந்திருந்த கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை நோக்கி இந்த அரைசதம் உனக்காகத்தான் என்பது போல சைகை செய்து காட்டினார்.

இதையும் படிங்க : 192 ரன்ஸ்.. பஞ்சாப்புக்கு எதிராக சூரியகுமார் அசத்தல்.. பொல்லார்ட்டை முந்தி ஹிட்மேன் ரோஹித் புதிய சாதனை

அதனை கவனித்த ஹார்டிக் பாண்டியா பவுண்டரி லைனில் அமர்ந்தவாறு கைத்தட்டி சூரியகுமார் யாதவின் இந்த சிறப்பான இன்னிங்சிற்கு வரவேற்பு தெரிவித்தார். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement