192 ரன்ஸ்.. பஞ்சாப்புக்கு எதிராக சூரியகுமார் அசத்தல்.. பொல்லார்ட்டை முந்தி ஹிட்மேன் ரோஹித் புதிய சாதனை

Rohit Sharma Suryakumar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் 33வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9வது இடத்தில் தவிக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்டன் சாம கரண் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரபாடா வேகத்தில் ஆரம்பத்திலேயே இசான் கிசான் 8 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு வேகமாக ரன்கள் குவிக்க முயற்சித்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அந்த வகையில் 12 ஓவர்கள் வரை நின்று விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது ரோகித் சர்மா இரண்டு பவுண்டரி 3 சிக்சருடன் 36 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த திலக் வர்மா உடன் சேர்ந்து எதிர்ப்புறம் தொடர்ந்து பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கிய சூரியகுமார் யாதவ் 34 பந்துகளில் அரை சதமடித்தார்.

அதே வேகத்தில் தொடர்ந்து விளையாடிய அவர் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 78 (53) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாட முயற்சித்து 10 (6) ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த டிம் டேவிட் 14 (7) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதியில் திலக் வர்மா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 34* (18) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் மும்பை 192/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3, கேப்டன் சாம் கரண் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இப்போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனிக்குப் பின் 250 போட்டிகளில் விளையாடிய 2வது வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த மைல்கல் போட்டியில் அடித்த 3 சிக்சரையும் சேர்த்து மும்பை அணிக்காக ரோஹித் 224 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்.எஸ் தோனிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லை தொட்ட – ரோஹித் சர்மா

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கைரன் பொல்லார்ட் சாதனையை உடைத்துள்ல அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கைரன் பொல்லார்ட் மும்பை அணிக்காக 223 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் தற்போது ஹர்திக் பாண்டியா 104 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

Advertisement