எம்.எஸ் தோனிக்கு அடுத்து இரண்டாவது வீரராக ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லை தொட்ட – ரோஹித் சர்மா

Rohit-and-Dhoni
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா இன்று ஏப்ரல் 18-ஆம் தேதி சண்டிகர் நகரில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருவதன் மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரோகித் சர்மா கடந்த 2011-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கேப்டனாக 5 ஐ.பி.எல் கோப்பைகளை பெற்றுக் கொடுத்து தற்போது இந்த 2024-ஆம் ஆண்டு மும்பை அணியில் முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளதன் மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல் வரலாற்றில் 250-வது போட்டியில் விளையாடி வருகிறார். இதன் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு (256 போட்டிகள்) அடுத்து 250 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதுவரை 249 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 30 ரன்கள் சராசரியுடன், 131 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 6472 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை 42 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதம் என அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

ரோஹித் சர்மா கடைசியாக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய லீக் போட்டியின் போது மும்பை அணியின் துவக்க வீரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து இருந்தார். இருப்பினும் அந்த போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இனிமேலும் ஏமாத்த முடியாது.. மும்பை அணிக்கு வைக்கப்பட்ட செக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. நடந்தது என்ன?

அவரது 250-ஆவது ஐ.பி.எல் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ரோஹித் சர்மா 25 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து சாம் கரண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement