இனிமேலும் ஏமாத்த முடியாது.. மும்பை அணிக்கு வைக்கப்பட்ட செக்.. ரசிகர்கள் மகிழ்ச்சி.. நடந்தது என்ன?

Toss 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் 33வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9வது இடத்தில் தவிக்கும் அந்த 2 அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் தற்காலிக கேப்டன் சாம் கரண் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆனால் அவர் வீசிய டாஸ் நாணயம் தரையில் விழுந்ததும் உடனடியாக அங்கிருந்த கேமராமேன் களத்தில் இருந்த நடுவர் அதை எடுப்பதற்கு முன்பாக வேகமாக ஓடி சென்று பெரிதாக்கி என்ன விழுந்தது என்பதை மொத்த ரசிகர்களுக்கும் காண்பித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் மகிழ்ச்சி:
அதாவது கடந்த சில தினங்களுக்கு மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் முக்கிய போட்டியில் மோதின. அதில் பல தருணங்களில் நடுவர்கள் மும்பைக்கு சாதகமாகவும் பெங்களூருவுக்கு எதிராகவும் நடந்து கொண்டதை ரசிகர்கள் ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதில் ஒரு பகுதியாக டாஸ் விழுந்ததும் களத்தில் இருந்த நடுவர் நாணயத்தை அப்படியே அடியிலிருந்து எடுக்காமல் மேலே கையை வைத்து தலைகீழாக எடுத்து மும்பை வெற்றி பெற்றதாக சொன்னார்.

அதை ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்தனர். மறுபுறம் களத்தில் அதை சரியாக கவனிக்காத பெங்களூரு கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ததை பார்த்துள்ளார். அதனால் தாம் ஏமாற்றமடைந்ததை அறிந்த அவர் அடுத்தப் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸிடம் மும்பை போட்டியில் நடுவர் எப்படி நாணயத்தை எடுத்தார் என்பதை பரிதாபமாக சொல்லி செய்கையில் காண்பித்தார்.

- Advertisement -

அதை கேட்டு பட் கமின்ஸ் சிரித்தது வைரலானது. மொத்தத்தில் அதிலிருந்து டாஸ் வீசும் நிகழ்வில் சில சமயங்களில் நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக நடந்து கொண்டது அப்பட்டமாக நிரூபணமானது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக எதுவும் நடந்து கொள்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க கேமராமேன் நாணயத்தின் அருகில் சென்று தலை விழுந்ததை காண்பித்தார்.

இதையும் படிங்க: மெதுவான ஆட்டத்தால் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ள அஜின்க்யா ரஹானே – அவரது இடத்தை பிடிக்கப்போகும் இளம்வீரர்

அப்போது பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கேட்டது போலவே தலை விழுந்ததாக நடுவரும் அறிவித்தார். அந்த வகையில் மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் யார் பக்கம் விழுந்தது என்பது வெளிப்படையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இனிமேலும் யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது என்றும் இது நாம் ட்ரெண்ட் செய்ததற்கான வெற்றி என்றும் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement