நடப்பு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்திய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன தெரியுமா?

Ruturaj-and-Kohli
- Advertisement -

சேப்பாக்கம் மைதானத்தில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீழ்த்துவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 62 ரன்களை குவித்து அசத்தினார்.

இந்த போட்டியில் தோல்வி அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் நீடித்திருக்கும் வேளையில் இந்த போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்த விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்திருந்தார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த 62 ரன்கள் மூலம் 10 போட்டிகளில் விளையாடி 509 ரன்கள் அடித்து நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : 1000 சொன்னாலும் தல செஞ்சது தப்பு.. மனசு கஷ்டப்படாதா? தோனி மீது சிஎஸ்கே ரசிகர்களே அதிருப்தி.. காரணம் என்ன

இந்த பட்டியலில் தமிழக வீரர் சாய் தர்ஷன் 418 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், கே.எல் ராகுல் 406 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement